பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாருங்கல் 53 அடிவாரத்திலே காதலர்கள் ஒரு கழனியிலே'வேல் செய்துகொண்டிருந்தார்கள். அவன் கிலத்தை உழுகிருன்; அவள் ஏரின் பின்னலேயே காதலன் அருகில் நடந்து கொண்டே விதைகளை ஒவ்வொன்ருகப் பன்ட்ச்சாலில் போட்டு மண்ணக் காலால் மூடி வருகிருள் - அந்தப் பாருங்கல் உருண்டுவரும் வழியிலேதான். அவர்கள் வேலை செய்கிருர்கள். அதற்கு நல்ல சந்தர்ப்பம் வாய்த்தது. அத்துடன் காதலர்களைப் பொடியாக்க வேண் டிய வேகமும் வலிமையும் அதற்குக் கிடைத்திருக்கின்றன. தடால், படார் என்று மோதிக் கர்ஜனை புரிந்துகொண்டு பாருங்கல் ஆத்திரத்தோடும் எக்களிப்போடும் உருண்டேர் டியது. எதிரிலே இருந்த மரங்களும் சிறு பாறைகளும் அதற்கு லட்சியமில்லை. அவற்றையெல்லாம் அது சிாடி யழித்துக்கொண்டு மேலே பாய்ந்தது. . . . வேலை செய்துகொண்டே காதல் மொழி பேசி மெய்ம் மறந்து நடந்த காதலர்களுக்கு அந்தக் கொடிய பாருங் கல்லின் பேராரவாரம் காதிலே விழவில்லை. ஆயிற்று; இன் லும் ஒரு விடிையிலே பாருங்கல் அவர்களைத் தாக்கி அழித்துவிடும். கடைசியாக ஒரே பாய்ச்சல்தான் பாக்கி. பாருங்கல் ஒரு செங்குத்தான திடரிலே உருண்டு அங்கிருந்து ஒரே குதியில் காதலர்களே அழிக்கும் ஆத்திரத் தோடு இடிஇடித்து அடியெடுத்துப் பாய்ந்தது. ஆல்ை அதன் ஆத்திரமே அதன் அழிவாக முடிந்தது. அந்தச் செங்குத்தான இடத்திலிருந்து கீழேயுள்ள ஒரு பாறையில் காவியபோது அது நூறு சுக்கலாக உடைந்து சிதறிப் போய்விட்டது. காதலர்கள் அதையும் உணரவில்லை. அன்புப் பெருக் சிலே மிதந்த அவர்கள் உலகத்தையே மறந்துவிட்டார்கள். மறுநாள் மாலை வேளையிலே மலைமீது அவர்கள் சக்தித்த