பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 காளிங்கராயன் கொடை ரையும் தமது கொள்கைக்கு மாற்றிவிட வேண்டும் என்ர் கருணுனந்த சுவாமிகள் கினைப்பதால்தான் இந்த விவாதத் திற்கே இடமேற்பட்டது. அன்று புதிதாக வந்திருந்த பக்தர் பெயர் ராமசாமி என்பது. அவர் விடைபெற்றுக்கொண்டு சென்ற பிறகு வழக்கம்போல் மேற்சொன்ன விவாதம் நடைபெற்றது. என்றும்போலக் கருணுனங்த சுவாமிகள் உற்சாகமாகப் பேசினர். தமது புதிய சீடர் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த் வரென்றும், அங்கு தாமே போய் அவரைக் கண்டு பேசி அழைத்து வந்திராவிட்டால், அவருக்குள்ள உண்மையான ஞான மார்க்க அவாவைப் பூர்த்தி செய்துகொள்ள வழி ஏற்பட்டிருக்காதென்றும் எடுத்துக் கூறினர். சுயம்புலிங்க சுவாமிகள் இரண்டொரு மறு மாற்றம் உரைத்துவிட்டு முடிவாகத் தமது இயற்கை முறுவலுடன் மெளனம் சாதித்தார். கருனைந்தருக்கு அந்த முறுவலேக் கண்டால் தான் சகிப்பதில்லை. தமது செய்கையின் பயனைப் பிரத்தி யட்சமாகக் காண்பிக்க இன்னும் சமயம் வரவில்லையே என்று ஏங்கினர். சில தினங்கள் கழிந்தன. கருணுனங்த சுவாமி களுக்கு ஏற்பட்டிருந்த ஏக்கம் நீங்கும் வகையில் ஒரு கடிதம் அவருடைய புதிய சீடர் ராமசாமியிடம் இருந்து வந்தது. அதைப் படிக்கப் படிக்க அவருக்கு ஆனந்தம் பொங்கலாயிற்று. பல நாள் தாம் கினைத்திருந்த எண்ணம் கைகூடும் சமயம் வந்து விட்டதென்று அவருடைய முகம் பிரகாசமடைந்தது. கண்ணில் வெற்றி துள்ளியது. கடி தத்தைப் பலமுறை தமது மனத்திற்குள்ளேயே வாசித்தார்; பிறகு ஒருமுறை உரத்துப் படிக்கலானர். - காட்டுப் பாளையம், சர்வஜித்து, சித்திரை, 5. “ருமத் கருனைந்த சுவாமிகள் அவர்களுடைய தரு வடிகளுக்கு, źs