பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளிங்கராயன் கொடை அன்னை தந்த ஒளி 'சொங்கப்பா, ஒரு நல்ல அழகான பெண்ணிருக் கிரு, கலியாணம் பண்ணிக்கிருயா?” என்று அவனைக் கேட் காதவர்கள் காட்டுப் பாளையத்தில் இருக்கமாட்டார்கள். ஆண்கள் மட்டுமல்ல; பெண்களுந்தான் கேட்பார்கள். சிறு வர் சிறுமிகளுக்கும் இந்தக் கேள்வியைக் கேட்டு அவ னிடம் விடை பெறுவதில் ஒரு மகிழ்ச்சி இருந்தது. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லச்சொங்கப்பனுக் குக் கொஞ்ச நேரம் ஆகும். இரண்டு மூன்று தடவை வற் புறுத்திய பிறகுதான், 'எனக்குச் சோறு போடப் பெரிய பண்ணைக்காரர் இருக்கிருங்கோ. எனக்கு எதுக்குக் கலி யாணம்” என்று ஆழ்ந்து யோசனை செய்து முடிவு கட்டிய வன்போலப் பதில் சொல்லுவான். இதே பதிலைத்தான் அவன் ஒவ்வொரு தடவையும் சொல்லுவானென்ருலும் அது பழக்கத்தில்கூடச் சீக்கிரமாக வந்துவிடாது. ஆழ்ந்த சிந்தனையின் முடிவு வெளியாவதுபோல வெகுநேரம் கழித் துத்தான் அது சொங்கப்பன் வாயை விட்டுக் கிளம்பும். சொங்கப்பன் பதில் சொல்லும்போது அவன் முகம் ஒரு தனிக் காட்சியாக இருக்கும். அகத்தின் அழகு முகத் தில் தெரியுமல்லவா? அப்படி அவன் முகத்தில் ஒன்றுமே தெரியாது. அவன் முகம் எப்பொழுதும் ஒர்ே மாதிரி குப்பையண்டின. இருட்டறையைப்போல் இருக்கும். மனத் தில் உள்ள உணர்ச்சிகளையெல்லாம் கண்களாகிய சாள