பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 காளிங்கராயன் கொடை .ே.....இருக் "ஆமா, உங்களுக்கு எத்தனே சோலியோ தாலும் எல்லோருமா வந்து நாலு காளக்கி இப்படி இருக் துட்டுப்போன மனசுக்கு சந்தோசமா இருக்கும். கட்டுத் தறியிலேயே கட்டிப் போட்டாப் புடி ஒரே பக்கத்திலே இருந்தா அவுங்களுக்கும் சலிச்சுப்போகும்” என்று பெரிய வர் தம் அனுபவத்திலே உறுதிப்பட்ட உண்மையை எடுத் துக் கூறினர். கொங்கு காட்டிலே எங்கள் ஊரிலே இப்படி அன் போடு பேசி வரவேற்பது சாதாரணமான பழக்கம். எனக்கு இந்தப் பேச்சைக் கேட்பதிலே தனி மகிழ்ச்சியுண்டு. இந்தத் தடவை ஊருக்குச் சென்ற போதும் இந்த அன்புப் பேச்சைக் கேட்டு என் உள்ளம் பூரித்தது. கொங்குநாட்டு வேளாளர்களின் பேச்சு ஓர் அலாதியான சுவையோடு இனிக்கும். அவர்கள் என் உறவினர்கள் என்பதால் மட்டும் அப்படி இனிக்கிறதென்று யாரும் கினைக்கவேண் டாம்; அந்தக் கொச்சையான பேச்சிலே அத்தனே கனிவும் கபடற்ற அன்பும் குழைந்து கிடப்பதை யாரும் எளிதில் உணர்ந்து கொள்ளலாம். கான் செம்பிலே யிருந்த தண்ணிரைக் கொஞ்சம் பருகி விட்டு வெற்றிலேயை மடிக்க ஆரம்பித்தேன். எனக்கு வெற்றிலே போடும் பழக்கம் கிடையாது. ஆளுல் எங்கள் ஊர்ப் பக்கத்திற்குச் சென்ருல் வெற்றிலே போடாமல் இருக்க முடியாது. அங்கு வாழும் மக்களுடைய அன்பை மனமார ஏற்றுக் கொண்டதற்கு வெற்றிலே போடுவது ஒர் அடையாளம். ஒரு வீட்டிலே விருந்துண்மைல்கூட வந்துவிடலாம். ஆல்ை வெற்றிலேயை ஏற்காமல் வந்து விட்டால் அந்த வீட்டார் மனம் வருந்துவார்கள். ஏனே வெற்றிலையைக்கூடத் தொடாமல் போய்விட்டார்கள். எங்கள்.மேலே மனசிலே என்ன வருத்தமோ?’ என்று அவர்கள் கவலைப்படத் தொடங்கிவிடுவார்கள்.