பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளிங்கராயன் கொடை 89 "பட்டணத்திலே இந்த வருசம் மழைதுளி எல்லாம் எப்படி?” என்று மருமகள் இந்த சமயத்திலே கேட்டாள். "பட்டணத்திலே மழையைப்பற்றி அவுங்களுக்கு என்ன கவலை? அங்கேதான் பணமா விளையுது. நம்மைப் போலே நிலத்தை நம்பியா அவுங்க பிழைக்கிருங்கோ' என்று பெரியவர் இடைமறித்துப் பேசினர். 'இல்லிங்க, பட்டணத்திலேயும் மழை இல்லாது போனுல் கஷ்டங்தானுங்க. குடிக்கக்கூடத் தண்ணிர் கிடைக்காது” என்று நான் சொன்னேன். "அது வாஸ்தவம் தம்பி, மழை இல்லாமல் போல்ை எல்லோருக்கும் கஸ்டத்தான். இருந்தாலும் எங்க கஸ்டம் உங்களுக்கு வராது. காங்கள் மழையை கம்பித்தான் பிழைக்க வேணும்” என்று பெரியவர் விவசாயிகளுக்கு மழை எவ்வளவு முக்கியம் என்பதைக் குறிப்பாகக் காட்டினர். அந்த சமயத்திலே ஒரு தள்ளாத கிழவர் கைத்தடியை ஊன்றிக்கொண்டு தடுமாறித் தடுமாறி அங்கே வந்தார். அவரைப் பார்த்தவர்கள் அவர் குறைந்தது இரண்டு காட் களாவது பட்டினியாக இருந்திருக்க வேண்டும் என்று உடனே கண்டுகொள்வார்கள். அவரை யாரென்று வீட்டுக்காரப் பெரியவருக்குத் தெரியாது. இருந்தாலும் வழக்கப்படி அவரை அன்போடு வரவேற்றுப் பாயில் உட்காரும்படி சொன்னர். 'வெற்றிலே போடுங்கோ - எங்கேயோ ரொம்பத்துாரம் போய் வந்திருக்கிருப்பிலே தெரியுது” என்று பெரியவர் அவரை இன்னரென்று தெரிந்துகொள்ளுவதற்காகக் குறிப் பாகக் கேட்டார். - "ஆமாங்கோ, திருச்செங்கோட்டுக்குப் போய் மலே யேறி அர்த்தனுரீசுவரரைத் தெரிசிக்க வேணும்னு ரொம்ப