பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 காளிங்கராயன் கொடை நாளாகத் தவனே. அதுக்கு இப்பத்தான் வேளே வந்து கூடிச்சு" என்று கிழவர் தமது மீண்ட பயணத்தைப்பற்றி விளக்கினர். கால் நடையாகவே போய்விட்டு வந்துட்டாப்படி இருக்குது?” என்று பெரியவர் மீண்டும் கேட்டார். "ஆமாங்க, அப்படித்தான் வேண்டுதலே செய்துக்கிட் டேன். வண்டி பூட்டவும் வசதி பத்தாதுங்க. எங்க ஊரி லிருந்து இருபத்தஞ்சு மைல் தானுங்கோ திருச்செங்கோடு. போக ஒரு நாள் - வர ஒரு நாள் - அங்கே சுவாமி தரிசனத் துக்கு ஒரு நாள், அவ்வளவு கானுங்கோ. இந்த வயசிலும் எனக்கு அது கஸ்டமில்லிங்கோ” என்ருர் கிழவர். "இங்கிருந்து திருச்செங்கோட்டுக்கு நேராகக் காவிரி யைத் தாண்டிப் போளுப் பத்து மைல் ஆகுது. அப்போ கம்ம ஊரு இங்கிருந்து இன்னும் மேக்கே இருக்குதுங் களா?' என்று பெரியவர் விகயமாகக் கேட்டார். "ஆமாங்கோ, இங்கிருந்து இன்னும் பதினேஞ்சு மைல் போகவேனும். திருச்செங்கோட்டிலிருந்து நான் கால் யிலே புறப்பட்ட நேரத்துக்கு இந்நேரம் ஊரே போய்ச் சேர்ந்திருக்க வேணும். இருபத்தஞ்சு மைல் ஒரே மூச்சிலே கடந்திடுவனுங்க......ஆளுல் இன்னேக்கி அப்படி முடி யல்லே.” "அதுக் கென்னங்க? அப்படி அவசரமாப் போகாவிட் டால் என்ன முழுகிப் போவுது? நாங்களெல்லாம் மனுசரு இல்லையா? இருந்து சாப்பிட்டுவிட்டு இளைப்பாறி நாளைக் குப் போனுப் போகுது' என்ருர் பெரியவர். "அதுக்கொன்னும் உங்கவீட்டிலே குறைவி ல்லிங்கோ, நீங்கதான் ஊர்ப் பண்ணுடீன்னு கேள்விப்பட்டு ராத்தி ரிக்கு இங்கே தங்கியிருந்து போகலாம்னு வந்தேன். இருப் டிலே கண் சரியாத் தெரியாதுங்கோ” என்ருர் கிழவர்.