பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளிங்கராயன் கொடை 91. "கண் தெரிஞ்சாலும் தெரியாது போலுைம் இருட் டிலே அப்படி எதுக்குப் போகவேனும் இது உங்க வீடு மாதிரிதானுங்கோ. எழுந்திருங்கோ சாப்பிடலாம்” என்று பெரியவர் அவரிடம் கூறிவிட்டு, தம்பி, நீங்களும் இன் னிக்கு இங்கேதான் சாப்பிடவேனும்” என்று என்னிடம் சொன்னர். நான் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு உடனே எழுந்தேன். பட்டினியாக வந்திருக்கும் கிழவ ருக்கு உடனே உணவு தரவேண்டும் என்பது எங்கள் இருவருடைய உட்கருத்தாகவும் இருந்தது. ஆனல் கிழவர் பாயைவிட்டு எழுந்திருக்கவில்லே. :நீங்கள் போய் சாப்பிடுங்கோ. நான் இன்னேக்கு சாப் பிடரதில்லை; உடனே படுத்துக்க வேணும்; அவ்வளவு: தானுங்க” என்று அவர் கூறினர். பண்ணுடி அவரை விடவில்லை. சாப்பிட்டே திர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். வந்தவர் ஒரே மனமாக மறுத்துக்கொண்டே இருக்கவே பண்ணுடிக்கு ஒரு சந்தேகம் வந்தது. கோயிலுக்குப் போய் வந்ததனுல் விரதம் ஒண்னும் இல்லையே?’ என்று அவர் கேட்டார். கோயிலுக்குப் போய்த் திரும்புகிறவர்கள் வீடு சேரும் வரை உண்ணுவிரதம் இருப்பதுண்டு. 'கோயிலுக்குப்போனதிலே விரதம் இல்லிங்கோ.ஆனல் வேறே ஒருவிரதம் இருக்குதுங்கோ. அதைஅப்புறம் நீங்கள் சாப்பிட்டுவிட்டு வந்த பிறகு வேணும்னு சொல்லறேன். இப்போ நீங்கள் போய்ச் சாப்பிடுங்கோ’ என்ருர் கிழவர். "எங்களுக்கு இப்போ அவசரம் இல்லிங்கோ. நாங்கள் வழக்கமாச் சாப்பிட இன்னும் நேரமாகும்” என்றேன் 19ான. , 'ஆது தெரிஞ்சுது தம்பீ. எனக்காகத்தான் பண் குடியும் இத்தனே அவசரமாச் சாப்பிட எழுந்திருக்கிருங்