பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தங்கச் சங்கிலி கிருஷ்ணசாமி ஒரு சாதாரணக் குமாஸ்தா. மர மத்து இலாக்காவிலே வேலை பார்த்து வந்தான் பஞ்சப்படி, வீட்டு வாடகைப்படி என்றெல்லாம் சேர்த்து மொத்தமாக மாதம் 125 ரூபாய் அவனுக் குக் கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு இந்தக் காலத்திலே பட்டணத்திலே குடும்பம் நடத்துவ தென்ருல் சுலபமான காரியமா? சுலபமல்லாவிட்டர் லும் அவனுடைய குடும்ப வாழ்க்கை இன்பமாகவ்ே. நடந்து வந்தது. அவனும் அவன் மனைவியும் தவிர் வீட்டிலே யாரும் இல்லை. கல்யாணம் ஆனது முதல் சென்ற இரண்டு ஆண்டுகளாக அவர்கள் தனிக் குடும்பம் நடத்தி வருகிரு.ர்கள். கிருஷ்ணசாமியின் தாய் தந்தையர்கள் தங்களுக்குச் சொந்தமான நிலங் களைப் பார்த்துக்கொண்டு கிராமத்திலே வசித்து வந் தார்கள். இவன் கல்லூரிப் படிப்புப் படித்தவளுதி லால் விவசாயம் செய்ய முடியவில்லை. உத்தியோகம் தேடிப் பட்டணம் வந்திருக்கிருன். மேலும் கிருஷ்ண சாமியின் படிப்பிற்காக ஏற்பட்ட கடனை அடைப் பதில் நிலங்களில் பாதியை விற்கவேண்டியதாயிற்று. மீதியுள்ள நிலங்களிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு தாய் தந்தையர் குடும்பம் நடத்துவதே பெரிய காரியம். இதல்ை இவனுக்கு உத்தியோகம் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. கிருஷ்ணசாமியும் அவன் மனைவி ருக்மிணியும் ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அன்புகொண்டிருந்தனர். அந்த அன்பை அடிப்படையாகக் கொண்டு குடும்பம் நடக்கிறபடியால் வாழ்க்கை ஒர் அழகிய இசை பாடலைப் போல இன்ப ஊற்ருகச் சென்றுகொண் டிருந்தது. வேலை செய்வதற்கென்று அவர்கள் ஆள் ல்வித்துக் கொள்ளவில்லை. விட்டு வேலையை இருவர் ம்ாகப் பகிர்ந்துகொண்டு செய்து வந்தர்ர்க்ள் கிருஷ்ணசாமி தண்ணிர் நிறைத்து #j್ಲಿ