பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

காளிதாசன் உவமைகள்


எதையும் தாங்கும், நிலத்தில் விழுந்தாள். அக் கொடியிலிருந்து விழும் பூக்கள்போல அவள் அணிந்திருந்த ஆபரணங்கள் உடலிலிருந்து நழுவின. ர.14:53, 54

சீதையின் அழகு வனத்திற்குச் சென்றதால் வாடவில்லை. அநுசுயை அளித்த மாலை, அணிகலன்கள், ஆடை, சந்தனம், முதலியவற்றால் அவள் முன்னிலும் பொலிவுற விளங்கினாள். அரசியாக இருக்கவேண்டிய சீதையைப் போலவே காட்டில் இருந்த சீதையும் காணப்பட்டதால், மக்கள் அவளை இராமன் குணங்களில் ஈடுபட்டு அவனுடன் காட்டுக்குச் சென்ற அரசத் திருமகள் என்றே கருதினார்கள்.

ஆனால் உண்மை அது அன்று.

அரசத் திருமகள் அயோத்தியிலேயே இருந்தாள்.இராமன் தன்னைப் புறக்கணித்துச் சீதையுடன் காட்டுக்குச் சென்றதற்காக கறுவிக்கொண்டு இருந்தாள். பதினான்கு ஆண்டுகள் கழிந்தன. இராமன் அயோத்திக்குத் திரும்பி சீதையுடன் பட்டாபிடேகம் செய்துகொண்டான். அரசத் திருமகளுக்கு இது பொறுக்க வில்லை. சீதை பதினான்கு ஆண்டுகள் இராமனை ஏகபோகமாக அநுபவித்ததுபோல தான் இனியேனும் இராமனை ஏக போகமாக அனுபவிக்க வேண்டுமென எண்ணி உலக அபவாதத்தைக் காரணமாகக் காட்டி, சீதையைக் காட்டுக்குத் துரத்திவிட்டான் போலும்.

இது சீதையின் வாக்கு. ர.14:63

சிவபெருமான் மன்மதனை அழித்தார். மன்மதனையும் ரதியையும் இணைத்திருந்த அணையும் அழிந்தது. இரதி புலம்புகிறாள்: "உன்னை அண்டி உன்னால் நான் வாழ்ந்தேன். உனக்கு அழிவு நேர்ந்தது; அவ் அழிவால் நம் தொடர்பு நிலை மாறியது; அன்பு என்னும் அணை ஒரு கணத்தில் உடைந்தது; நிலை மாறியதால், நீ ஒட நேர்ந்தது இயற்கைதானே. நான் தனியே நிற்கிறேன்.” கு. 4:6


"கோடைக்காலத்தில் சூரியகிரணங்கள் ஆற்றுநீரை உறிஞ்சுவதால் ஆறு வற்றிப்போகிறது. ஆனால் ஆறு அழிந்து போவதில்லை.கோடைக்குப்பின் மழை வரும்; நீர்ப்பெருக்கால்