பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

காவல்துறை பற்றி

காவல் துறையிலே வேலை வாய்ப்புகளை மேலும் அதிகப்படுத்துகிற வகையிலே தமிழக அரசு எடுத்து இருக்கிற முயற்சியை இந்த மன்றம் நன்றாக அறியும். அதைப்பற்றிப் பேசிய நேரத்திலேகூட, சில பேர் குறிப்பிட்டார்கள். இதிலே கட்சி சார்புடையவர்களாக 1,000 பேரை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வீர்கள் என்று சில பேர் குறிப்பிட்டார்கள். இந்த வேலைக்கு பள்ளி இறுதி வகுப்பிலே தேறியவர்கள்தான் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இந்த வேலைக்கென்று தகுதி படைத்தவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட முடியுமேதவிர, நான் இன்ன கட்சியைச் சார்ந்தவன், ஆகவே உயரத்தில் 2” குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, மார்பு சுற்றளவு 2" குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, என்னைக் காவல் துறையில் வேலைக்கு அமர்த்துங்கள் என்று யாரும் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னபடி அவர்கள் எடுத்துக் கொண்டால், உள்ளபடியே அந்தத் துறையிலே இந்த அரசு ஜனநாயகம் அற்ற முறையிலே நடைபெறுகிறது என்பதை நீங்கள் நிச்சயமாகக் குற்றம் சாட்டலாம்.

ஆனால், ஒரு நல்ல காரியத்தைத் தொடங்குகிறோம். காலம்

காலமாகக் காவல் துறைக்கு ஆட்கள் எப்படி எடுக்கப் பட்டிருக்கிறார்கள். எந்த வகையில் காவல் துறைக்கான ஆட்களை எடுக்கிறோம்? ஒரு ஆயிரம் பேர்களுக்குப் புதிதாக வேலை கொடுக்கிறோம். என்பதைப் பாராட்டாவிட்டாலும் கட்சிக் காரர்களைப் போட்டுவிடுவீர்களோ என்று கேட்பது விந்தையாக இருக்கிறது. கட்சிக்காரர்கள் யார்? நான் கேட்கிறேன். ஒரு மனிதன் உள்ளத்தில் ஒரு கொள்கைக்கான தத்துவம் இருக்கலாம். ஆனால், காவல் துறைக்கு எடுப்பவர்களுக்கு அங்க அடையாளங்கள், திறமை, உடல் அமைப்பு, தேக ஆரோக்கியம் இவைகளைத்தான் காணமுடியுமே அல்லாமல், அவர் எந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்பதைக் கண்டுபிடிக்கத் தக்க 'எக்ஸ்-ரே' கருவி எதுவும் காவல் துறையினர் கைவசம் இல்லை.

கட்சியைச் சேர்ந்தவர்களை எடுப்பார்களோ என்று கூறுவதன் மூலம், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க ஒரு பகுதியில் நாம் எடுத்திருக்கும் முயற்சியைப் பாராட்ட மாண்புமிகு உறுப்பினர்கள் நழுவிவிட்டதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன். நிச்சயமாகச் சொல்லுகிறேன். தகுதியற்றவர்கள், கட்சிக்காரர்கள்