பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

காவல்துறை பற்றி

அதிகாரிகளும், குற்றங்களைத் தடுப்பதில் அல்லது கண்டு பிடிப்பதில் அல்லது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதில் தங்களது கடமைகளை நிறைவேற்றும்போது, சட்டத்தில் சொல்லியுள்ள கூற்றைக் கண்டிப்பாகப் பின்பற்றி நடக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவசியமற்ற முறையில் அல்லது நியாயமற்ற முறையில் அல்லது நியாயமற்ற வகையில் செல்வாக்கினை எவர் பயன்படுத்தினாலும், காவலர்கள் அதை உறுதியாக எதிர்க்க வேண்டும்; நியாயமும், நேர்மையும் நிலைநாட்டப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன், சட்டம் அல்லது நடைமுறையில் சொல்லியிருப்பவைகளுக்கு மாறான நடவடிக்கை எதையும் பிறர் கொண்டுவரும் செல்வாக்கிற்கு இணங்கி அல்லது அடிபணிந்து மேற்கொள்ளக் கூடாது' என்று காவல் துறைக்கு அறிக்கை அனுப்பப் பட்டிருக்கிறது.

அந்த வகையில்தான் இன்றைக்கு அந்தத் துறை செயல்பட்டு வருகிறது. ஒன்றிரண்டு இடங்களில் தவறுகள் இருப்பது சுட்டிக் காட்டப்பட்டன. அப்படிப்பட்ட தவறுகள் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான், அரசின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டிலும், அதையடுத்துக் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டிலும், நான் திட்டவட்டமாகச் சொல்லி யிருக்கிறேன். யார் எந்தப் பிரச்சினையைக் கொண்டுவந்து சொன்னாலும், கொண்டு வந்து சொல்கிறவர்கள் யார் என்று பார்க்காமல், அந்தப் பிரச்சினையில் இருக்கும் நியாய அநியாயம் என்ன என்பதைப் பார்த்து அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுங்கள் என்றும், 'தவறு செய்யுங்கள்' என்று நானே சொன்னாலும் கூட, 'நீங்கள் பண்ணாதீர்கள்' என்றும் காவல் துறையினர் மாநாட்டிலும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டிலும் எடுத்துக் காட்டியிருக்கிறேன். அதற்கேற்ப, இன்றைக்கு அந்தத் துறை நடைபெற்று வருகிறது.

வழக்குகளில் மற்றக் கட்சிக்காரர்கள் தலையிடவே இல்லையா? பொது விவகாரங்களாகட்டும், அல்லது தனிப்பட்ட விவகாரங்கள் ஆகட்டும், தலையிடவே இல்லையா என்பது ஒரு பிரச்சினை. இரண்டாவது, மற்றக் கட்சிக்காரர்கள் மனுக்கள் கொடுத்து, அவை அலட்சியம் செய்யப்பட்டிருக்கின்றனவா, என்பது