பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

நா.

107

இன்னொரு பிரச்சினை. சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், திரு. சௌந்தரபாண்டியன், திருநெல்வேலி மாவட்டம் அடங்கார்குளம் பஞ்சாயத்துத் தலைவர் திரு. செல்லையா நாடார் என்பவர் வள்ளியூரில் பஞ்சாயத்து ஒன்றிப்புத் தேர்தலில் சௌந்தரபாண்டியன் ஆதரவு கொடுத்ததால், எதிர் மனுதாரர்கள் 11 பேர்கள் தனக்கும் சௌந்தரபாண்டியனுக்கும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் தனக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகவும், இதுகுறித்து சௌந்தரபாண்டியனுக்கும் தனக்கும் பாதுகாப்பு வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். என்னிடத்தில் மிரட்டல் கடிதம் அளிக்கப்பட்டது. உடனடியாகக் காவல் துறைக்குத் தெரிவித்து, அந்த மனுவைப் பற்றிக் காவல் துறையினர் விசாரித்து, யார் யார் சுட்டிக்காட்டப்பட்டிருந்தார்களோ அவர்களெல்லாம் எச்சரிக்கப்பட்டார்கள். அதேபோல பல நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்ட முடியும்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற் காகவோ அல்லது சுதந்திராக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற் காகவோ அலட்சியப்படுத்துவதில்லை. இந்த மன்றத்திலே டாக்டர் ஹாண்டே போன்றவர்கள் சில விவகாரங்களை என்னிடத்தில் எடுத்துத் தந்ததும், அவைகளை உடனடியாக விசாரிக்கச் சொல்லி விசாரணைக்குப் பிறகு அதிகாரிகள் தந்த பதிலையும் அவர்களிடத்தில் உடனடியாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன். ஆகவே, இந்தத் துறையில் பாரபட்ச மற்ற முறையில், கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்ட முறையில் பணிகள் நடைபெறு கின்றன என்பதை மீண்டும் மீண்டும் எடுத்துக் கூற விரும்புகிறேன்.

பொதுவாக, பெரும்பாலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாகக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்தச் சந்தேக வழக்குகள் போடப்படுவது அறவே நீக்கப்பட வேண்டும், அகற்றப்பட வேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டார்கள். இந்தச் சந்தேக வழக்குகளில் சில நேரங்களில் ஏதும் அறியாத அப்பாவிகள் சிக்கிக் கொள்ளுகிறார்கள் என்றெல்லாம் எடுத்துக் கூறியிருப்பதை இந்த அரசும் கவனிக்காமல் இல்லை. ஆனாலும் சில நேரங்களில், அப்படி நடந்துவிடும் சம்பவங்களுக்காக நான் வருந்துகிறேன். ஆனால், சந்தேக வழக்குகள் போடப்படும்போது,