கலைஞரின் சட்டமன்ற உரைகள்
111
கண்காணிப்போடு இருந்து வருகிறது என்பதை இங்கே மன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள ஆய்வுரையில் எடுத்துக் காண்பித்திருக் கின்றேன்.
அந்த அடிப்படையில் மாண்புமிகு உறுப்பினர்கள் பலரும் பேசியிருக்கின்றார்கள். 'நக்சலைட்ஸ்' ஏன் வளருகின்றார்கள், எந்த அடிப்படையில் வளருகின்றார்கள் என்பதை முன்பே நான் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் இங்கே எடுத்துக் கூறினேன். அவர்கள் வளருவதற்கான அடிப்படை எதுவாக இருந்தாலும், சமுதாயத்தில் உள்ள பல்வேறு சூழ்நிலைகள் மாற்றப்படவேண்டும் என்று நாம் கருதினாலும், வறுமையை வென்று வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கிச் சமுதாயத்தில் ஒரு பெரிய புதிய மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் இன்றைக்கு உறுதி கொண்டிருக்கின்றோம் என்றாலும், நாம் இன்னும் சமுதாயத்திலே ஆற்றவேண்டிய காரியங்கள் பல இருக்கின்றன. நாம் மாற்றியமைக்கவேண்டிய சட்டங்கள் பல இருக்கின்றன. எனவே, நாம் அந்த அடிப்படையை உணராமல் இல்லை. அந்த அடிப்படையை உணர்ந்து, ஜனநாயக ரீதியில் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளும் நேரத்திலே, வன்முறைகள்மூலம் இந்த நாட்டு மக்களிடத்தில் வளமான வாழ்க்கையை உருவாக்கிவிடலாம் என்று நினைத்து, இரத்தத்தில்தான் அந்த அருமையான வளம் மிகுந்த செந்தாமரை முளைக்கும் என்று கருதுவது தவறு என்று நாம் பல்வேறு சந்தர்ப்பங்களிலே சுட்டிக்காட்டியிருக்கிறோம். அவர்களுடைய உணர்வுகளை நான் என்றைக்கும் மதிக்கின்றேன். நாடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் தங்களைத் தீவிரவாதிகளாக ஆக்கிக்கொண்டு இருக்கின்றார்கள் என்றால், அந்த உணர்வுகளை மதிக்கின்றேன்.
ஆனால், அதே நேரத்திலே, அவர்களுடைய செயல்களை, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் யாரும் ஏற்க முடியாது. ஆகவே, நாம் மெல்ல, மெல்ல ஆனால் உறுதியாக, இந்தச் சமுதாயத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவேண்டியவர் களாக இருக்கின்றோம் அப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தீவிரவாதிகளாக இருப்பவர்களும் நம்மோடு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அதே