பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

காவல்துறை பற்றி

நேரத்தில் அவர்கள் இப்படி நமது நமது கவனத்தைத் திசை திருப்புவதாலும், கொலை, கொள்ளை போன்ற மிகக் கொடூரமான காரியங்களில் ஈடுபட்டு, ஒரு நாட்டின் அமைதியை, சமுதாயத்தினுடைய அமைதியைக் கெடுப்பதால் அப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டுவந்துவிட முடியாது என்று இந்த அரசு உறுதியாகக் கருதுகிறது. அரசுப் பொறுப்பிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் கருதுகின்றது.

எனவே, அப்படிப்பட்ட தீவிரவாதிகளுக்கெல்லாம் மீண்டும் ஒரு முறை வேண்டுகோளாக விடுக்கின்றேன். உங்கள் உணர்வுகளை மதிக்கும் அதே நேரத்திலே நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள செயல்கள் கண்டிக்கத்தக்கவை, தேவையற்றவை, எனவே, அவற்றை விட்டுவிட்டு, இந்தச் இந்தச் சமுதாயம் முன்னேறுவதற்கு இந்தச் சமுதாயம் முன்னேற்றப்பட வேண்டும் என்று அக்கறை கொண்டுள்ள ஜனநாயக அரசோடு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அப்படியில்லாமல் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலருடைய தலைகளைக் கிள்ளியெறிந்துவிடுவதால், சிலருடைய குழந்தைகள் பதைக்க பதைக்க, குடும்பத் தலைவனைக் கொன்று விடுவதால் நாட்டில் உண்மையான புரட்சி ஏற்பட்டுவிடும் என்று கருதினால் அப்படிப் பட்ட புரட்சி ஒரு மாத காலம் அல்லது இரண்டு மாத காலம் நடைபெறலாம். ஆனால் புரட்சிக்குப் பின்னால் பூத்துக்குலுங்க வேண்டிய சமதர்மப் பூக்காடு மலருமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே, இந்தச் சமதர்மப் பூக்காட்டை உருவாக்கு வதற்காக நாம் எல்லோரும் ஒன்றுபட்டுப் பாடுபடவேண்டும்.

இதே நேரத்தில் இவற்றையெல்லாம் மீறி வன்முறைதான் எங்கள் லட்சியம், பலாத்காரம்தான் எங்கள் குறிக்கோள், கொலை கொள்ளைச் செய்யும் நாட்கள்தான் எங்களுக்கு இன்பமான திருநாட்கள் என்று அவர்கள் கருதுவார்களானால் அந்த விஷயத்தில் இந்த அரசு இப்போதுள்ளதைவிட இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரும் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்ளாமல் இருக்க முடியாது.

காவல் துறையினர் மிகவும் நாணயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று எடுத்துச் சொல்லப்பட்டது. மாண்புமிகு அங்கத்தினர்கள் யாரும் மொத்தமாகக் காவல் துறையை