கலைஞரின் சட்டமன்ற உரைகள்
113
அப்படியே குற்றம் சொல்லவில்லை என்பதை நான் முழுக்க முழுக்க நம்புகிறேன். நமது நாடார் அவர்கள் பேசும் நேரத்தில் கூட விவாதத்தில் அதிகமாகச் சூடு பிறக்கவில்லை என்றார்கள். சூடு இல்லாத காரணம் எதிர்க்கட்சியினுடைய திறமைக்குறைவு காரணம் என்று நான் நிச்சயமாகச் சொல்ல மாட்டேன். நீங்கள் நினைத்தால்
திரு. ஆர். பொன்னப்ப நாடார் : நீங்கள் அப்படிச் சொன்னாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : சொல்லாமல் இருக்கும்போது ஏன் வலிய ஏற்றுக்கொள்ள வேண்டும்? எனவே நான் எதிர்க்கட்சியினருடைய திறமைக் குறைவு என்று சொல்ல மாட்டேன். பதிலாக, சூடாகப் பேசும் அளவிற்கு இந்தத் துறை எந்தத் தவறுகளையும் இழைத்து விடவில்லை என்பதுதான். எனவேதான் சூடேறவில்லை.
மதிப்பிற்குரிய தங்கமணி போன்றவர்களும், நாடார் போன்றவர்களும் திருமதி அனந்தநாயகி அம்மையார் போன்றவர்களும் டாக்டர் ஹண்டே போன்றவர்களும் தங்கள் தொகுதியில் நடந்ததாகச் சொல்லப்படும் இரண்டொரு நிகழ்ச்சிகளைப்பற்றிக் குறிப்பிட்டார்கள். அவைபற்றி அவ்வப்பொழுது துரிதமாக நடவடிக்கை எடுத்து ஆவன செய்ய வேண்டும் என்று கட்டளை பிறப்பித்து இருக்கின்றேன். இன்னும் சொல்லப்போனால் நமது சங்கு முத்துத்தேவர் அவர்கள் தொகுதியில் நடந்த சில சம்பவங்கள் பற்றிக் காவல் துறையினரிடமிருந்து தகவல்கள் பெற்று அதன் விவரங்களை நமது நாடார் அவர்கள்மூலமாக திருமதி அனந்தநாயகி அம்மையார் அவர்களுக்குத் தந்து இருக்கிறேன். எனவே இத்துறை விழிப்போடும் ஒழுக்கத்தோடும் நடந்துகொள்ள வேண்டிய பெரும்பொறுப்பை இந்த அரசு ஏற்றுக்கொண்டு இருக்கிறது.
அதே நேரத்தில் முஸ்லீம் லீக் உறுப்பினர் திருப்பூர் மொய்தீன் அவர்கள் சொன்னதை மறந்துவிடுவதற்கு இல்லை. காவல் துறையினரிடம் பண்பை எதிர்பார்க்கும் நாம் அவர்களிடமும் பண்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று
5 - க.ச.உ. (கா.து.)