பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

117

On 24th June 1971 Thiru Panneerselvam was found drunk and he was charge-sheeted by the Police in Tiruvannamalai in Crime No.829/71/Tiruvannamalai Police Station. He was charged under Section 4 (1) (j) of the Prohibition Act. He was fined Rs. 20 by the Sub-Magistrate, Tiruvannamalai for this offence.

இந்த பன்னீர்செல்வம் மதுவிலக்குச் சட்டத்தை மீறியதற்காக அபராதம் கட்டியவர். அவர் வந்து உண்ணாவிரதம் இருந்திருக்கிறார் (சிரிப்பு). நான் உண்ணாவிரதம் இருந்தவர்களின் உணர்ச்சிகளுக்குக் குந்தகம் ஏற்படுத்துவதற்காகச் சொல்ல வில்லை. பத்திரிக்கையிலே வந்திருக்கிற செய்தியிலே காணப்படுகின்ற பன்னீர்செல்வம் எப்படிப்பட்டவர், அவர் அமைச்சர் ப. உ. சண்முகத்தின் மருமகன் என்று செய்தியைப் போடுவதன்மூலம், இப்படித்தான் பல செய்திகள் தவறான முறையில் போடப்படுகின்றன என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்காகச் சொல்லுகிறேன்.

போலீசார் நாணயமாக ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்று கருதுகிற நாம், செய்திகளை வெளியிடுகின்ற நேரத்தில் அந்தப் போலீசார் நாணயமாக, ஒழுக்கமாக நடந்துகொண்டதைப் பாராட்டுவதற்குப் பதிலாக, தவறுகள் செய்தார்கள் என்று குறிப்பிடுவது கொஞ்சமும் நல்லதல்ல. தேர்தல் நேரத்தில் போலீஸார் தவறாக நடந்தார்கள், தவறாக நடந்தார்கள் என்றெல்லாம் இங்கே பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் எடுத்துக் காட்டினார்கள்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, கோயம்புத்தூரில் தேர்தல் நேரத்தில் பேசிய மதிப்பிற்குரிய தலைவர் காமராசர் அவர்கள் ஒன்றைச் சொல்லியிருக்கிறார்கள். அது தினமணிப் பத்திரிகையில் வந்திருக்கிறது.. "போலீசை வைத்து முதலமைச்சர் பயமுறுத்துகிறார்" என்று என்னைத் தாக்கிவிட்டு, கடைசியாக "நடப்புத் தேர்தல் காலத்தில் போலீசார் பொதுவாக நேர்மையாகவும், பாரபட்சமற்ற நிலையிலும் நடந்து கொண்டிருக்கிறது" என்று பாராட்டினார் என்று செய்தி வந்திருக்கிறது. போலீசார் தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சிக்கு அடிமையாக இருந்தார்கள்; எதிர்க்கட்சியை அடக்கி ஒடுக்கப்