பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

காவல்துறை பற்றி

பயன்படுத்தினார்கள் என்கின்ற செய்திகள் எந்த அளவுக்குத் தவறானவை என்பதற்காகச் சொல்லுகிறேன்.

அது மாத்திரமல்ல. இன்றைக்குப் பகிரங்கமாகவே நாங்கள் குற்றங்கள் செய்கிறோம் என்று பேசப்படுகிறது. நேற்றைக்குக் கடற்கரைக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்கள். 'கல்லூரியிலே 4,000 ரூபாய் நன்கொடை என்ற பெயரால் நான் கொடுத்துத்தான் என்னுடைய வீட்டுப் பிள்ளையை காலேஜில் சேர்த்திருக்கிறேன்' என்று கடற்கரையிலே நேற்று ஒருவர் பேசியிருக்கிறார். பத்திரிகையிலே செய்தி வந்திருக்கிறது. எந்தப் பத்திரிகையோ அல்ல 'தினமணி' பத்திரிகையிலே செய்தி வந்திருக்கிறது. கல்லூரியில் சேர்க்க நன்கொடை என்ற பெயரால் தான் 4,000 ரூபாய் கொடுக்கவேண்டியிருக்கிறது என்று சொன்னவர், காமராசர் ஆட்சிக் காலத்திலே லஞ்ச ஊழல் இல்லாமலிருந்தது என்று சொல்லியிருக்கிறார். தான் கொடுத்த நன்கொடையை லஞ்சம் என்கிறார். உள்ளபடியே நன்கொடையாக இருந்தால் அதைக் குற்றமாகச் சொல்லக்கூடாது. அது குற்றமாகச் சொல்லப்பட்ட பிறகு, அது லஞ்சமாகிறது. லஞ்சம் வாங்கியவர் மட்டுமல்ல குற்றவாளி; கொடுத்தவர் அதைவிடக் குற்றவாளி. இதை யோசித்து அரசு நடவடிக்கை எடுத்தால், கட்சிச் சார்போடு நடந்துகொள்ளுகிறார்கள் என்று குற்றச்சாட்டு கூறினாலும் ஆச்சரியமல்லை. பகிரங்கமாக ஒரு குற்றம் சாட்டப்பட்டு விட்டது. நான் எல்லா அரசுக் கல்லூரிகளையும் கேட்டுவிட்டேன். நாவலர் அவர்களையும் கேட்டுவிட்டேன். அவரும் விசாரித்து எந்த அரசுக் கல்லூரியிலும் 4,000 ரூபாய் பேசிய ந ண்பரிடமிருந்து நன்கொடையாக வாங்கியதாகத் தகவலில்லை என்று சொல்லி விட்டார். நன்கொடை என்ற பெயரில் வாங்கியிருப்பதாகக் குற்றச்சாட்டு. அப்படி வாங்கியவர்கள் லஞ்சம் என்கின்ற அளவில் வாங்கியிருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு. காமராசர் காலத்தில் அந்த லஞ்சம் இல்லை. இப்போது லஞ்சம் இருக்கிறது என்பது குற்றச்சாட்டு அந்தக் குற்றங்களைச் செய்துவிட்டு, அதைப் பகிரங்கமாக மேடையில் ஏறி, நானே லஞ்சம் கொடுத்தேன், நன்கொடை என்ற பெயரால், என்று சொல்லுகிறார் என்றால், அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? கேட்டவுடனேயே காவல் துறைக்கு எழுதியனுப்பி யிருக்க வேண்டும். இப்படி என்னுடைய வீட்டுப் பிள்ளையைச்