பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

121

சென்னை புளியந்தோப்பு என்ற இடத்தில் குருவையா என்ற காங்கிரஸ்காரர் கொலை செய்யப்பட்டார். குற்றவாளி யாரும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. வழக்கு புலனாய்வில் உள்ளது.

இறந்தவர்கள் 8 பேரில் 5 பேர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். 3 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். தயவு தாட்சண்யம் பாராமல், கொலை செய்யப் பட்டவர் எந்தக்கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கண்டிக்கப்படுவார்கள். குற்றவாளிகள் யார் என்று பார்க்காது, வழக்கின் தன்மையை ஆராய்ந்து, நீதி வழங்க இந்தக் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த அவைக்கு அறிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இப்படி எல்லா வகையிலும் நம் நாட்டில் சட்டம், அமைதி, ஒழுங்கு இவைகளைக் காப்பாற்ற, பணியாற்றக்கூடிய இந்தக் காவல்துறை மானியத்தின்போது எடுத்துச் சொல்லிய குற்றங் குறைகள் இருக்குமானால் அவற்றைக்களைய இந்த அரசு மேலும் முயற்சிகளை எடுத்துக்கொள்ளும் என்று சுட்டிக்காட்டி, மாண்புமிகு உறுப்பினர்கள் இன்றியமையாத காரியங்களை எல்லாம் இங்கே அவையினுடைய கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் அந்தத் துறை அதிகாரிகளுடைய கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள், என்னுடைய கவனத்திற்கும் கொண்டு வந்திருக்கிறார்கள். இவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்த்து நடுநிலைமையில் இருந்து இந்த அரசு நடவடிக்கை எடுத்துக் கொள்ளும் என்கிற உறுதியினை அளித்து, இந்த மானியத்திற்குக் கொடுத்திருக்கிற வெட்டுத் தீர்மானங்களை எல்லாம் திரும்பப் பெறவேண்டுமென்று வேண்டி இந்த அளவில் அமைகிறேன்.

DR. H. V. HANDE : Sir, on a point of clarification. The Hon. Chief Minister spoke about Panneerselvam incident in Vellore. Has he got it checked up? There are two Panneerselvams and one Panneerselvam was convicted in Tiruvannamalai and there is also another Panneerselvam. I want to know whether they are of the same person and I am not holding any brief for anyone. I want to know the