124
காவல்துறை பற்றி
தலைவர்களும் இங்கே கருத்துக்களை எடுத்துச் சொல்லி யிருக்கிறார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். இந்த இலாக்காவுக்கும், அரசுக்கும் இருக்கின்ற தொடர்பினை வைத்துக் கொண்டு, இந்த இலாக்காவிலே நடைபெற்று விடுகின்ற சிற்சில தவறுகளை ஒரே அடியாக அரசின் மீது சுமத்தி, அரசியல் ரீதியில் இந்தப் பிரச்சினையை ஆராய்வது நல்லது அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதும் நல்லது என்று கருதுகிறேன்.
இலாக்காவில் உள்ளவர்கள் மக்களிடத்தில் நல்ல தொடர்பு கொண்டவர்களாக இருக்கவேண்டும், எளிமையாக மக்களிடத்தில் பழகுகின்றவர்களாக இருக்கவேண்டும், அவர்களைப் பார்த்து ஒரு அச்சம், பய உணர்ச்சி இவைகள் எல்லாம் ஏற்படாத அளவுக்கு அந்தத் துறை இருத்தல் வேண்டும் என்ற கருத்தினை இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்த பெரியவர் மணலி ஐயா அவர்களும், கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர் மாண்புமிகு திரு. கே.டி.கே. தங்கமணி அவர்களும், வேறு சிலரும் எடுத்துச் சொல்லியிருந்தார்கள். இந்த எண்ணத்தை யாரும் மறுப்பதற் கில்லை. மக்களிடத்தில் நல்ல தொடர்பு நிச்சயமாக இந்த இலாக்காவினர்களுக்கு இருத்தல் வேண்டும். அதே நேரத்தில் இந்த இலாக்காவிற்கு அடங்கி நடந்திடல் வேண்டும், இந்த நாட்டில் அமைதியைக் காக்க, ஒழுங்கினைக் காக்க என்ற உணர்வும் பொது மக்களிடத்தில் இருந்திடல் வேண்டும். அது அறவே அற்றுப் போய்விடுமானால் தாறுமாறான சமுதாயச் சூழ்நிலை, மோதுதல் நிறைந்த சமுதாயச் சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்பதில் யாரும் மாறுபட இயலாது.
ஒரு கதை சொல்வார்கள். ஒரு பாம்பு ஒரு சாதுவினிடத்தில் சென்று, 'என்னைக் கண்டால் எல்லோரும் வெறுக்கிறார்களே ஏன்?' என்று கேட்க, அந்தச் சாது நீ எல்லோரையும் கடிக்கிறாய் என்ற காரணத்தினால் வெறுக்கிறார்கள், நீ அந்த வேலையை விட்டுவிட வேண்டும்' என்று சொல்ல, அந்தப் பாம்பும் 'சரி' என்று சென்று விட்டதாம். பத்து நாட்களுக்குப் பிறகு உடம்பெல்லாம் காயத்தோடு அந்தப் பாம்பு மீண்டும் சாதுவை அடைந்து “என்னைச் சிறுவர்கள் எல்லாம் கூட அடிக்கிறார்களே, உடம்பில் ஏற்பட்டிருக்கும் காயங்களைப் பாருங்கள்" என்று வருந்தியதாம். அதற்கு அந்தச் சாது “உன்னை யாரையும் கடிக்காதே என்று தானே நான் சொன்னேன். அடிக்க வருகிறவர்களை படம் எடுத்துச் சீறாமலா