பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

125

இருக்கச் சொன்னேன்? படம் எடுத்துச் சீறி இருந்தால் அவர்கள் பயந்து போய் இருப்பார்களே” என்று சொன்னாராம்.

அதைப்போல போலீஸ் இலாக்கா கடிக்காமல் இருக்கலாம் - சீறாமல் இருந்து விடுமானால் பாம்பின் கதிதான் இந்த இலாக்காவுக்கும் என்பதை நான் மாத்திரம் அல்ல - ஆளும் கட்சியாக இருந்து இன்றைக்கு எதிர்க்கட்சியில் இருப்பவர்களும், வேறு மாநிலங்களில் ஆளும் கட்சியாகவும் இங்கே எதிர்க் கட்சியாகவும் இருப்பவர்களும், ஒரிசா போன்ற மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருந்து இன்றைக்கு எதிர்க்கட்சியில் இருப்பவர்களும், மற்ற மாநிலங்களில் கூட்டாக ஆளும் கட்சியில் இருப்பவர்கள் இங்கே தோழமைக் கட்சியாக இருப்பவர்களும் நன்றாக உணர்வார்கள் என்று கருதுகிறேன்.

ஆக, போலீஸ் இலாக்கா மக்களோடு நெருங்கிக் கலந்து விட வேண்டுமென்ற அந்தக் கருத்துக்கு இடையிலும், மக்களை அச்சுறுத்துகிற அந்தக் கருத்துக்கு இடையிலும், அவர்களுக்கு என்று இரு நிலைகளுக்கும் இடையே அமைந்த சமநிலையில் நின்று தங்கள் பணியினை ஆற்றிடல் வேண்டும் என்ற முடிவினுக்கு நாம் வர வேண்டியவர்களாக இருக்கிறோம்.

சமுதாயத்தில் நல்ல பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு விடுமானால் குற்றங்கள் குறைந்துவிடும் என்ற கருத்துக்களை திரு. மணலி ஐயா அவர்களும் எடுத்துச் சொன்னார்கள். அது ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்துத்தான். ஆயினும் ஓரளவுக்குத்தான் குற்றங்கள் குறையும். அமெரிக்கா போன்ற நாடுகளில் நம் நாட்டைவிட அதிக அளவு குற்றங்கள் மலிந்து இருக்கின்றன என்பதையும், அங்கே யார் வேண்டுமானாலும் ரிவால்வரை வைத்திருக்கலாம், யாரை வேண்டுமானாலும் சுடலாம் என்ற நிலைமை இருப்பதையும் அவர்களே இங்கே கோடிட்டுக் காட்டினார்கள்.

எந்த அளவுக்குக் குற்றங்கள் மலிந்து இருக்கின்றன, சமுதாயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நாடுகளில் என்று பார்க்கிறபோது, சமுதாய முன்னேற்றம் ஓரளவுக்குத்தான் குற்றங்கள் குறைய உதவி புரிகிறது என்பதை உணர முடியும். அதே நேரத்தில், சில பேர்கள் குற்றங்கள் புரிவதையே ஒரு பழக்கமாக்கிக்கொண்டு விடுகிறார்கள். நான் அண்மையில் ஒரு