128
காவல்துறை பற்றி
அதைத் தொடர்ந்து 3,100 புதிய முதல்நிலைக் காவலர் பதவிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அதையும் திரு. கே.டி.கே. தங்கமணி அவர்கள் ஆயிரம் என்று சொன்னார்கள். முதல்நிலைக் காவலர்கள் ஆயிரம் பேர் தற்போது 1-2-1972-லிருந்து பயிற்சி பெற்று வருகின்றனர். 500 பேர் கோவையிலும், 500 பேர் வேலூரிலும் பயிற்சிகளில் சேர்ந்திருக்கிறார்கள். பாக்கி 2,100 பேர் எஸ்.எஸ்.எல்.சி. வரையில் படித்தவர்களும், அது வரையில் படிக்காமல் நிறைந்த அனுபவம் உள்ளவர்களும் இரண்டாம் நிலைக் காவலர் பிரிவிலிருந்து முதல்நிலைக் காவலராக மாற்றப்படுகிற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 60 புதிய காவல் வட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
தஞ்சாவூர் காவல் மாவட்டம் தஞ்சை மேற்கு, தஞ்சை கிழக்கு என இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
குற்றம், குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்ய கணக்கீடு இயந்திர நிலையம் அமைக்க (Computer Centre) ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
13,50,000 ரூபாய் செலவில் காவல்துறை கம்பியில்லாத் தந்தி முறையை விரிவுபடுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
120 காவல் வட்டங்களில் வானொலித் தொடர்பு சாதனம் (V.H.F) இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பொருத்தப்படும்.
14 தொலைக் கையச்சுகள் (Teleprinters) அமைக்கப் பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டில் ரூ. 17,10,000 செலவில் 30 ஜீப்புகள், 30 லாரிகள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
16 இயங்கும் குற்றஞ்சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்களை மாவட்டங்களில் நிறுவ ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் காவல்துறை நிழற்பட நிலையங்களை அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.