கலைஞரின் சட்டமன்ற உரைகள்
129
ரூ. 4,50,000 செலவில் உருவ நிழற்படி (Fascimile Transmitters) அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயர்மட்டக் குழுவினால் ஏற்கப்பட்டுள்ள காவல்துறை ஆணைக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்தினால், தற்போது இருக்கும் உட்கோட்டங்கள் 69 லிருந்து 90 ஆகவும், காவல் வட்டங்கள் 182-லிருந்து 307 ஆகவும் அதிகரிக்கும். மேலும், காவல்துறையில் உள்ள பதவிகள் தற்போதுள்ளதைவிட 3,250 அதிகமாகும்.
உயர்மட்டக் குழுவின் அறிக்கை கிடைத்த பிறகு மேலும் என்ன என்ன காரியங்களைத் தொடர்ந்து நடத்தலாம் என்பதை நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம்
தமிழ்நாட்டில் காவல்துறையினர் மிகமுக்கியமாக தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து, மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாகவும், அவர்கள் காட்டிய ஆற்றல், அஞ்சாமை, அறிவோடு அவர்களை ஆராய்ந்து, எடுத்த நல்ல நடவடிக்கைகளின் மூலம் நக்சலைட்டுகளின் நடவடிக்கை இன்றைக்கு தமிழ்நாட்டில் பெருமளவுக்குக் குறைந்திருக்கிற நிலையைக் காண்கிறோம்.
ஏற்கனவே ஆந்திர மாநில நக்சல்பாரிகள் நாகி ரெட்டியும் மற்ற 7 பேர்களும் கைது செய்யப்பட்டு, ஆந்திர மாநில போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்ட பெருமை தமிழ்நாடு போலீஸ் இலாகாவுக்கு உண்டு.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள எரெனியல் கிராமத்தில், திரு. தங்கசாமி நாட்டார் வீட்டில் நடந்த நக்சல்பாரி கொள்ளை வழக்கில் போலீசார் காட்டிய திறமையின் காரணமாக ஜெகந்தாதன் உட்பட 9 பேர்களுக்கு 7 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதும் நம் மாநில போலீசாரின் திறமைக்கு எடுத்துக்காட்டு
பிரசித்தி பெற்ற பெண்ணாடம் வழக்கில் நெல் திருட்டு, வெடிகுண்டு சம்பவங்களுக்கும் வெடிகுண்டு சம்பந்தம் குறித்து புகார் செய்தவர் கொலையிலும், கலியபெருமாள் சம்பந்தப் பட்டிருந்தார். வெடிகுண்டு சம்பவத்தில் அண்ணாமலைப்