130
காவல்துறை பற்றி
வாயிலாக
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு. கணேசன் மற்ற இருவரும் இறந்தனர் என்ற செய்தியைப் பத்திரிகை அறிந்திருக்கிறீர்கள். பெண்ணாடம்
காலை
வழக்கில்
கலியபெருமாளுக்கும் அவருடைய மகன் வள்ளுவனுக்கும் தூக்குத் தண்டனையும், மற்ற ஐந்து பேர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. போலீசார் மிகுந்த கஷ்டத்திற்கு இடையே அவர்களைக் கைது செய்தனர்.
திரு. கே.டி.கே. தங்கமணி : தலைவர் அவர்களே, தூக்குத் தண்டனையானது செஷன்ஸ் கோர்ட்டால் கொடுக்கப் பட்டிருக்கிறது. அதை ஹைகோர்ட் ஊர்ஜிதம் செய்ய வேண்டும் ஹைகோர்ட் ஊர்ஜிதம் செய்த பிறகுதான் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்று சொல்லலாம். It is always subject to confir- mation by the High Court. மற்ற தண்டனைகளைப்பற்றி குறிப்பிட்டாலும், தூக்குத் தண்டனைப்பற்றி இப்படிக் குறிப்பிடுவது
சரியல்ல.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பு எல்லா ஏடுகளிலும் வந்திருக்கிறது. அவரே அப்பீல் செய்யப் போகாவிட்டாலும் நாமே அளிக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதை வெளியிடுவதில் தவறு இல்லை. இப்படிப்பட்ட நேரங்களில் பொறுப்பு வாய்ந்த உறுப்பினர் இப்படிப் பேசும்போது, அதைப் பயன்படுத்திக்கொண்டு, தீவிரவாதிகள் தங்களுக்காகப் பேசக் கூடியவர்கள் நாட்டில் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வார்கள்.
திரு. கே.டி.கே. தங்கமணி : I was only desiring to point out the legal aspect of it; It will not be proper to call it so now. மாண்புமிகு பேரவைத் தலைவர் : தூக்குத் தண்டனை என்று சொல்லப்பட்டிருக்கிறது.
திரு. கே.டி.கே. தங்கமணி : தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்று சொல்லக்கூடாது.
மாண்புமிகு பேரவைத் தலைவர் : தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தான் முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள்.