பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

131

திரு. கே.டி.கே. தங்கமணி : தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது என்பதை செஷன்ஸ் கோர்ட்டால் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டவர் என்று சொல்லலாம். அதைத்தான் நாங்கள் கேட்கிறோம். ஹைகோர்ட்டில் அது ஊர்ஜிதம் செய்யப் படவேண்டும். அவர் அப்பீல் பண்ணலாம்.

திரு. என். கணபதி : தலைவர் அவர்களே, தூக்குத் தண்டனையை உயர்நீதிமன்றம் கன்ஃபர்ம் செய்யவேண்டும். அதை கன்ஃபர்ம் செய்வது தவிர தூக்குத் தண்டனை அளிப்பது அதனுடைய வேலை அல்ல. செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பு கன்ஃபர்ம் செய்யப்படுகிற வரையில் அல்லது ரத்து செய்கிற வரையில் அது தூக்குத் தண்டனை என்றுதான் கருதப்படும்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, எனக்காக வழக்கறிஞர்கள் எல்லோரும் வாதாடியதற்கு என் நன்றி.

அடுத்து, கந்தசாமி, பஞ்சலிங்கம், கிருஷ்ணசாமி, ஜகந்நாதன் ஆகிய தீவிர கம்யூனிஸ்டுகள் 7-5-1950 அன்று மானுப்பட்டி மிராசுதார் ராமசாமி கவுண்டரை உடுமலைப் பேட்டையில் அவர் வீட்டில் கத்திகளால் குத்திக் கொலை செய்தார்கள். தொடரப்பட்ட வழக்கில் கந்தசாமி, பஞ்சலிங்கம் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது

1970-ம் ஆண்டு ஜூலை மாதம் தீவிர கம்யூனிஸ்டு முருகையா, காத்தமுத்து மற்றும் எதிரிகள் தஞ்சை மாவட்டம் பெருமாங்குளம் நிலச்சுவான்தார் முத்துச்சாமி சோழகர் என்பவரை பிச்சுவாவால் குத்திக் கொலை செய்ய முயற்சித்தனர். இவர்கள் பேரில் வழக்கு தொடர்ந்ததில் 8 எதிரிகளுக்குத் தலா 18 மாதம் கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டது. பாலு என்னும் தீவிர கம்யூனிஸ்டு இன்னும் தலைமறைவாக இருந்து வருகிறார்.

அதேபோல், ஸ்ரீமுஷ்ணம் மிராசுதார் ராஜகோபால் பிள்ளை என்பவரை 22-12-1970-ம் தேதி இரவு தீவிர கம்யூனிஸ்டுகள் கழுத்திலும் முகத்திலும் வெட்டிக் கொலை செய்தார்கள். இவ்வழக்கு விசாரணையில் உள்ளது.