பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

காவல்துறை பற்றி

கன்னியாகுமரி மாவட்டத்தில் சென்ற 1970-ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில், தோட்ட முதலாளிகளைக் கொலை செய்யவும், கொள்ளையடிக்கவும், ஜி. கிருஷ்ணபிள்ளை என்ற தீவிர கம்யூனிஸ்டுத் தலைவரும் அவருடைய 6 சகாக்களும் சதி செய்து வெடி குண்டு தயார் செய்தார்கள். வெடிகுண்டு செய்யும்போது, அவைகள் வெடித்து, சுந்தரம் என்ற நபர் இறந்து போனார். அதன் பின்பும் இவர்கள் கொலை, கொள்ளை செய்ய முயற்சிசெய்தார்கள். இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.

சென்னையிலே 4-3-1971 அன்று அண்ணா நகரில் அரசுக்குச் சொந்தமான பேருந்துகளை நிறுத்தி, தீ வைத்து நாசம் செய்ய தீவிர கம்யூனிஸ்டுகள் சுவாமிநாதன் என்பவர் தலைமையில் நடவடிக்கை எடுத்தார்கள். வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

திருச்சியில் கருப்பூர் என்ற கிராமத்தில் ஒரு நிலச் சுவான்தார் கொலை செய்யப்பட்டார். வழக்கு விசாரணையில் உள்ளது.

முத்து தங்கப்பா, திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் கொலை செய்யப்பட்டார். தியாகராசன், கணேசன் ஆகியவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குருமூர்த்தி, அரங்கசாமி இவர்கள் தஞ்சை செஷன்ஸ் நீதிபதியால் தண்டனை அளிக்கப்பட்டனர்.

பயங்கரவாதிகள் தீவிரம் பேசிக்கொண்டு தங்களுடைய கொள்கைகள், எண்ணங்கள் நிறைவேற ரத்தப் புரட்சி ஒன்றுதான் சரியான வழி என்ற தவறான எண்ணத்தை மக்கள் மத்தியிலே சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள சாதாரண மக்கள், பாட்டாளி மக்கள் உள்ளத்திலே பதிய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட ஒரு இயக்கம் போலீசாரின் கடுமையான நடவடிக்கைகள் மூலமாகவும் திறமையான நடவடிக்கைகள் மூலமாகவும் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதை விளக்குவதற்குத்தான் நான் இந்த விவரங்களைக் கூறினேன்.

காவல் துறையினருக்குப் பல்வேறு சலுகைகள் அளிக்கப் படுகின்றன. காவல் துறையினர் சில முக்கியமான நேரங்களில்