பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

133

தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் இவ்வாறு குற்றங்களைக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதையும் அவர்களுடைய பணிக்காலத்திலே மிகுந்த பொறுப்போடும் நேர்மையோடும் நடந்து கொண்டார்கள் என்பதையும் கணக்கெடுத்து ஒவ்வொரு செப்டம்பர் 15-ஆம் நாள் அன்றும் 'முதலமைச்சர் பரிசு' என்ற பெயரால் தங்கப் பதக்கங்களும், ஐந்து ஆயிரம் ரூபாய், மூன்று ஆயிரம் ரூபாய், ஆயிரம் ரூபாய் என்ற அளவுக்குப் பொற்கிழிகள் அளிக்கின்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

காவலர் நல நிதி என்ற நிதியில் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு இருந்ததை 1971-72ஆம் ஆண்டிலே ஒன்றரை லட்சம் ரூபாய் என்ற அளவுக்கு அதிகப்படுத்தியிருக்கிறோம்.

1971-72ஆம் ஆண்டிலே கிராமங்களுக்கு ஆங்காங்கிருக்கிற போலீஸ் ஸ்டேஷன்களிலிருந்து சென்று வருவதற்கு காவல் துறையினருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கவேண்டுமென்று குறிப்பிடப்பட்ட யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு 100 மோட்டார் சைக்கிள்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு கூடுதலாக 50 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட இருக்கின்றன.

கடன் உதவியிலே காவல் துறையினர் 5 ஆயிரம் 5 சைக்கிள்கள் வாங்கிக் வாங்கிக் கொள்வதற்காக கொள்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை மாண்புமிகு உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

இவ்வளவு சலுகைகளும் நாம் செய்திருக்கிறோம் என்றாலும் முழுதும் நிறைவானதா, இன்னும் செய்யப்பட வேண்டாமா என்ற கேள்விகள் கேட்டு காலையிலிருந்து பேசிய உறுப்பினர்கள் எல்லாம் பேசியிருக்கிறார்கள். அதற்கேற்றவாறு தான் நான் முதலிலே கூறியதைப் போல் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள் ஆராயப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் நாட்டிலே இந்தப் புதிய அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு ஏதோ காவல் துறைப் பணிகள் வேகமாக நடைபெற வில்லை, பெரிய பெரிய திருட்டுகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற கோஷம் பலமாக இருக்கிறது. மதிப்பிற்குரிய காங்கிரஸ்