136
காவல்துறை பற்றி
5. 40,000. ரொக்கம் ரூ. 11,932, கடன் பத்திரங்களின் மதிப்பு ரூ. 2,87,000, தங்க நகைகளின் மதிப்பு ரூ. 2,500, துணிகளின் மதிப்பு ரூ. 1,000, வெள்ளி சாமான்களின் மதிப்பு ரூ. 25,000. இவ்வளவும் களவு போன சொத்துக்களில் 90 சதவீதம் கைப்பற்றி இந்தக் குற்றவாளிகளின் மீது வழக்கு தொடர்ந்து இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆனால் சட்ட மன்றத்திலே வாய்ப்பு இருக்கிறது, தவறான தகவல்களைத் தருகின்ற நேரத்திலே உடனடியாகப் பதில் அளிக்கும் வாய்ப்பை அமைச்சர்கள் பெற்றிருக்கிறோம். பதில் அளிக்கிறோம். காலையில்கூட சட்ட அமைச்சரவர்கள் அவர்களது தவறுகளைத் திருத்தக்கூடிய அளவிற்குச் சொன்னார்கள். நானும் இவ்வளவு விவரங்களைத் தந்திருக்கின்றேன். ஆனால் வெளியிலேயும், பத்திரிகைகளிலேயும் சிவலிங்கம் செட்டியார் வீட்டில் நடந்த கொள்ளையில் அரசு தலையிட்டதன் காரணமாகத் தாமதம் ஏற்பட்டிருக்கிறது என்று, வேண்டுமென்றே அவதூறாகக் கூற வேண்டுமென்ற நோக்கத்தோடு செய்யப்படும் பிரச்சாரங்கள் ஏதோ இந்த அரசை மக்கள் மத்தியிலே குற்றம் சாட்டுவதற்குப் பயன்படலாம். ஆனால் எல்லா அரசுகளுக்கும் பொதுவாக இருக்கின்ற இத்தகைய இலாக்காவை மக்கள் மத்தியில் மதிப்பற்றதாக ஆக்கிவிடும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு மிகுந்த கவனத்தோடு இந்தப் பிரச்சினைகளை அணுக வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
அடுத்து, திரு. மணலி கந்தசாமி அவர்கள், சிலைகள் அதிகமாக வெளிநாடுகளுக்குத் திருட்டு போகின்றன என்றும், கண்காணிக்க வேண்டுமென்றும் காலையிலே எடுத்துக் கூறினார்கள். அது உண்மைதான். 1959ஆம் ஆண்டிலே 153 சிலைகள் திருடப்பட்டு, போலீசாரால் 103 சிலைகள் மீண்டும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. 1960ஆம் ஆண்டில் 240 சிலைகள் திருடப்பட்டு, அவற்றிலே 161 சிலைகள் திரும்பக் கிடைத்திருக் கின்றன. 1971ஆம் ஆண்டிலே 208 சிலைகள் திருடப்பட்டு 133 சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சிலைகள் திருட்டு நீண்ட நாட்களாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. தெக்கலூர் சிவலிங்கம் செட்டியார் வீட்டுத் திருட்டில் ஏதோ அரசியல் அல்லது அரசு தலையிட்டதாகச் சொன்னார்களே, அவர்களுக்குச்