கலைஞரின் சட்டமன்ற உரைகள்
139
சுட்டிக்காட்டுகிறேனே அல்லாமல் வேறல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
க
திரு. ஆர். பொன்னப்ப நாடார் : தலைவரவர்களே, இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஏதாவது முடிவு ஏற்பட்டு இருக்கிறதா? அல்லது அதுவல்லாமல் தகவலாக இப்பொழுது இருக்கிறதா என்பதை முதலமைச்ச ரவர்கள் விளக்க வேண்டும்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளிலுள்ள ள அந்தச் சிலைகளையெல்லாம் இங்கே கொண்டுவருவதற்கு வெளி நாடுகளோடு துப்பறியும் இலாக்காவால் தொடர்பு கொள்ளப்பட்டிருக்கிறது. அவைகள் மீண்டும் வந்தபிறகு விசாரணை ஆரம்பம் ஆகும். எனவே, பதிவு செய்யப்படாமல் இல்லை.
திருமதி. த. ந. அனந்தநாயகி : தலைவரவர்களே, விசாரணை முடிந்து குற்றம் ருசு செய்யப்பட்டால்தான் குற்றவாளி என்று சொல்லலாமே தவிர, வழக்கு இருக்கும்பொழுதே சொல்வது சரியல்ல.
மாண்புமிகு கலைஞர் மு. கலைஞர் மு. கருணாநிதி கருணாநிதி : நான், குற்றவாளி என்று சொல்லவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் என்று சொன்னேன். குற்றம் சாட்டப்பட்டவர் குற்றாலம் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிறார்கள் என்று சொன்னேன்.
திருமதி த. ந. அனந்தநாயகி : முதலமைச்சரவர்களே சொல்வது சரியல்ல. இப்பொழுது வேறு கட்சிக்கு மாறிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அந்தத் தகவல் வந்திருக்கிறதா?
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அம்மையார் அவர்களைக் கேட்டுக் கொண்டுதான் மாறியிருப்பார்கள் என்று கருதுகிறேன். இதுவரையில் அப்படி மாறியதாகத் தெரியவில்லை. ஸ்தாபன காங்கிரசில்தான் இருப்பதாகத் தெரிகிறது. ஒருவேளை அப்படி தவறு செய்பவர்களை ஸ்தாபன காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும், அல்லது வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்சியிலிருந்து வெளியேற்றப் படவேண்டும், திலகர், காந்தி என்ற பெயரிலேயிருந்தாலும், அல்லது