பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

145

தாக்கி ஆறு போலீசார் உட்பட பலர் காயமுற்றனர். ரத்தம் சிந்துவதைத் தடுப்பதற்காக தியாகராஜன் உட்பட 142 பேரைப் போலீசார் கைது செய்தார்கள்.

அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் எஃப். டபிள்யூ. ஏ. மோரீஸ், ஐ.சி.எஸ்., அவர்கள் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைவாக ஒரு கடிதம் எழுதினார். ஐந்தாம் தேதியன்று மாவட்ட ஆட்சித் தலைவர் மோரிஸ் ஒரு நீண்ட அறிக்கையை அவருடைய சொந்த விசாரணைக்குப் பின் அனுப்பியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது :

I consider the action of the Police in arresting the President, District Board and other people was justified in the circumstances. It is for consideration of the Government whether Mr. Theagarajan should be permitted to act as President of the District Board with such grave charges pending against him and as his official position might enable him to gain an unfair advantage. .. என்று மாவட்ட ஆட்சியாளர் இவ்வளவு தெளிவாக அறிக்கை அனுப்பி, திரு. தியாகராஜன் ஜில்லா போர்டு தலைவராக நீடிக்க அனுமதிக்கலாமா என்று கேட்டதற்கு 12-7-1951-ம் தேதி அரசு,

"பெரியகுளம் சப்-மாஜிஸ்ட்ரேட் வெங்கடாசலத்தையும், பெரியகுளம் இன்ஸ்பெக்டர் ஆப் போலீசையும், தேனி சப்-இன்ஸ்பெக்டரையும் ஹவில்தார் மேஜரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யுமாறு" தந்தி கொடுத்தது.

அரசின் இந்த உத்தரவு கிடைத்தவுடன் சப்-மாஜிஸ் ட்ரேட்டை சஸ்பெண்ட் செய்துவிட்டு ஆட்சியாளர் 17-1-1951-ம் தேதி ஒரு கடிதம் எழுதினார். அதில்

'It is however not clear to me what is the basis for the charge against the Stationary Sub-Magistrate and what evidence has to be examined by me to substantiate the charge ...'

என்று கூறிவிட்டு முடிவில் அவ்வாறு குற்றம் சாட்டுவது நியாயமாகவோ சரியாகவோ இருக்குமா என்பது தனக்கு மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது என்று கூறுகிறார்.

'I am doubtful whether it is fair or reasonable to permit the charge against the Stationary Sub-Magistrate.' OT GOT MI

என்று

6 - க.ச.உ. (கா.து.)