கலைஞரின் சட்டமன்ற உரைகள்
147
இதுபோன்ற தலையீடுகள், அரசாங்கமே நேரடியாகத் தலையிட்டு இவரைக் கைது செய்யலாமா என்று கேட்கிற அளவிற்கு தலையீடுகள் அந்தக் காலத்தில் நிரம்ப நடைபெற்றிருக்கின்றன. உதாரணத்திற்காக மட்டும் ஒன்று சொன்னேனே தவிர வேறு அல்ல.
DR. H.V. HANDE : Sir, does the Hon. Chief Minister think that we want such I.C.S. Officers like Mr. Morris and that the Government will give protection to such officers? Will the Government nurture such officers? Now most of the discussions take place telephonically between the Government and the Collectors. Also, the then Chief Minister who was responsible for that, is not in the House now and we do not know what had actually happened then. Also, Thiru Thiagarajan is no more and so there is one here to refute the information given by the Government. . . .
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அப்படிப்பட்ட அலுவலர்களை நாங்கள் என்றைக்கும் பாராட்டுகிறோம். ஆ னால் அவர்களைப் பாராட்டாமல் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்தார்களே அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறது, நாடு என்பதைத்தான் சொன்னேனே அல்லாமல், வேறு அல்ல. தியாகராசன் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று சொன்னார்கள், அந்த ஆபீஸர் இல்லை என்று சொன்னார்கள். பைல் இருக்கிறது. அவர்கள் இல்லாவிட்டாலும் பைல் இருக்கிறது.
1947-ல் இருந்து விசாரணை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்கிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்கள். அந்த முறையில்தான் இருக்கிறது. அந்த பைல் இருக்கிறது.
அடுத்து, திரு. கே.டி.கே. தங்கமணி அவர்களும் மற்ற உறுப்பினர்களும் லாக்கப்பில் ஏற்பட்ட மரணம்பற்றி உருக்கமாகச் சொன்னார்கள். அவைகள் பெருமளவிற்குத் தடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுப்பினர்கள் உள்ளத்தோடு என் உள்ளத்தையும் இணைத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு லாக்கப் மரணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட வேண்டுமென்று என்னென்ன தடுப்பு முறைகளைச் செய்ய வேண்டுமோ அவைகளைச் செய்து வருகிறோம். ஆறு மணிக்கு மேல் போலீஸ் லாக்கப்பில்