148
காவல்துறை பற்றி
யாரையும் வைக்கவேண்டாம், பக்கத்தில் சப்-ஜெயில் இருந்தால் அங்கு அனுப்பி விடுங்கள் என்று சொல்கிறோம். பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தால் போலீஸ் லாக்கப்பில் ஆறு மணிக்கு மேல் வைக்க வேண்டாம், பக்கத்தில் சப்-ஜெயில் இருந்தால் அங்கு அனுப்பிவிடுங்கள் என்று சொல்கிறோம்
சில குறைபாடுகள் உள்ளன. போலீஸ் ஸ்டேஷனே இல்லாமல் சில வீடுகளை வாடகைக்கு எடுத்து எடுத்து போலீஸ் ஸ்டேஷனாக வைத்துக்கொண்டிருக்கிறோம் அங்கு போடப்படுகிற சென்ட்ரி ஜன்னலுக்கு நேராக நின்று கவனித்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலை இல்லாமல் வீடு அமைப்புகள் இருக்கின்றன. அதைக்கூட ஏற்றவாறு கட்டிக் கொடுக்க வேண்டுமென்று இருக்கிறது. இதுபோன்ற சில சிக்கல்கள் காரணமாக காவலாளரையும் ஏமாற்றிவிட்டு சில தற்கொலைகள் நடந்து விடுகின்றன. எல்லாமே தற்கொலைதானா என்றால் எனக்கு சந்தேகம் ஏற்படும் போது அவற்றிற்கு விசாரணை வைக்கச் சொல்கிறேன்.
திரு. பொன்னப்ப நாடார் அவர்களும், ஜேம்ஸ் அவர்களும், வேறு சிலரும் கன்னியாகுமரியில் வேலப்பன் என்ற ஒருவர் மர்ம மரணம் பற்றி எடுத்துச் சொன்னார்கள். உடனடியாக அந்த போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இரண்டு அதிகாரிகளும் தாற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். பொன்னப்ப நாடார் அவர்கள் இத்தகவலை எடுத்துக் கொடுத்தார்கள், கொடுத்த உடனே தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று ஐ. ஜி. அவர்களைக் கேட்டுக்கொண்டு அவர்கள் அதற்கான நடவடிக்கைகளை முதலிலேயே எடுத்து விட்டதாகவும் மேலும் நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறி ஐ. ஜி. அவர்கள் உடனடியாக அந்த இன்ஸ்பெக்டரையும், சப்-இன்ஸ்பெக்டரையும் அந்த இடத்திலிருந்து மாற்றுவது அல்ல, தாற்காலிக வேலை நீக்கமே செய்திருக்கிறார்கள். டி. ஐ. ஜி. விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் நிச்சயமாகச் சொல்கிறேன். யார் மீது தவறு இருந்தாலும் அவர்கள் எந்தளவிற்குக் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டியவர்களோ நிச்சயமாக அது செய்யப்படும், அதில் எந்தவிதமான தயவுதாட்சண்யமும் காட்டப்படமாட்டாது என்று