150
காவல்துறை பற்றி
சார்பு வாதமாக வைத்துக்கொள்ளக்கூடாது. ஊர்வலமாகச் சென்றவர்கள் தகராறு செய்திருக்கிறார்கள். அதன் தொடர்பாக இந்தத் தகராறு நடந்திருக்கிறது. எனக்கு இப்படித் தகவல் கிடைத் திருக்கிறது. அவர்களுக்கு அப்படித் தகவல் கிடைத்திருக்கிறது.
பெரியபட்டணம் நிகழ்ச்சிபற்றி நேரிலே பார்த்திருக் கிறேன் என்று சொன்னார்கள். அங்கு மங்களசுவாமி நிதிக்காக கம்யூனிஸ்ட் நண்பர்கள் வசூல் செய்தார்கள். ஒரு கம்யூனிஸ்ட் ந ண்பரின் சொந்தக்காரர், அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர், அவர் கொடுக்காததால் அவர்கள் வீட்டிற்குச் சென்று ரகளை செய்ததாகவும், அவர் மனைவியைத் தாக்கியதாகவும், அங்கு தாறுமாறான காரியங்கள் நடந்தன. திரு. தங்கமணி அவர்கள் போலீசார் மிகுந்த கெடுபிடி செய்தார்கள் என்று சொன்னார்கள். அவர்கள் நேரில் பார்த்ததாகச் சொன்னார்கள். அவர்கள் சொல்லியதை ஒதுக்கித் தள்ளிவிட நான் தயாராக யில்லை. ஒரு பொறுப்புமிக்கக் கட்சியின் தலைவர் எடுத்துச் சொல்கிற குறைபாடுகளை நான் ஒதுக்கித் தள்ளிவிட விரும்பவில்லை.
ஹாண்டே அவர்கள் போலீசார்பற்றி அன்றே சில குறைபாடுகளைச் சொன்னார்கள். இப்போதும் சொல்லி யிருக்கிறார்கள். அவைகளை எல்லாம் இந்த அரசு சார்பில் நான் விசாரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஹாண்டே அவர்கள் குடமுருட்டி குண்டு பற்றி ஒரு அறிக்கை இங்கே வைக்கவேண்டும் என்பதில் ரொம்பச் சங்கடப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் : ஆவலாக
இருக்கிறார்கள்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : திருத்தத்திற்கு நன்றி. அவருக்கு முதலமைச்சர் மீது அவ்வளவு அன்பும், அவ்வளவு பற்றும், பரிவும், பாசமும் இருப்பதற்கு என்ன இருந்தாலும் விட்ட குறை தொட்ட குறை, போகுமா? - (சிரிப்பு). அந்த அளவுக்கு இருப்பதற்கு உண்மையிலேயே மகிழ்ச்சி யடைகிறேன். பத்திரிகையில் வந்து இருக்கிறது. அவர் கூட பேசியதாகப் பார்த்தேன். ஏதோ குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுவதற்காக யாரோ இரண்டு ராணுவ வீரர்கள் 2 குண்டுகளை