பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

153

உரை : 8

நாள் : 23.03.1973

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, தமிழ்நாடு காவல் துறை மானியம் குறித்து காலையிலிருந்து அனைத்துக் கட்சிகளுடைய தலைவர்களும் இந்த மாமன்றத்தின் மாண்புமிகு உறுப்பினர்களும் கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

பல

இன்று ஒருவரைவிட ஒருவர் வேகமாகப் பேச வேண்டும் என்பதிலே நல்ல போட்டி இருந்தது என்பதை நான் காலையிலிருந்து கூர்ந்து கவனித்து வருகின்றேன். அந்தப் போட்டியிலே யார் வென்றார்கள் என்பதை என்னால் சொல்ல முடியாவிட்டாலும் அவர்கள் போட்டுக் கொண்ட போட்டியிலே யாருடைய போர்க் கருவி கூர்மையானது என்பதைச் சோதித்துப் பார்க்க என்னைத்தான் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை மாத்திரம் நான் மறந்து விடவில்லை. இறுதியிலே எனக்கு பெரு மகிழ்ச்சி என்னவென்றால் நம்முடைய காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. பொன்னப்ப நாடார் அவர்கள் நான் எழுதி காங்கிரஸ் அமைச்சர்களால் தடைசெய்யப்பட்ட உதய சூரியன் என்ற நாடகத்திலே வருகின்ற தாலாட்டுப் பாட்டை அவரே பாட வேண்டிய ஒரு நிலைமைக்குக் கொண்டு வந்து வைத்து விட்டேனே என்பதிலே எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி. நான் அந்த நாடகத்தை ஏன் தடை செய்தீர்கள் என்று முன்னாள் முதலமைச்சர் பெரியவர் திரு. பக்தவத்சலம் அவர்களை இந்த மன்றத்திலே கேட்டு, இந்தப் பாடல் தடை செய்யப்பட வேண்டுமா என்று கேட்டு அதை இந்த மன்றத்திலே நான் படித்துக் காட்டினேன். பாடிக்காட்டவில்லை. பாடியிருந்தால் இந்த மன்றம் உடனடியாகக் கலைந்துவிடும், எனவே நான் பாடிக் காட்டவில்லை. படித்துக் காட்டினேன். ஆனால் அவர்கள் என்னுடைய பேச்சுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை எடுத்துக் கொடுத்தார்கள் என்பதிலே நான்