பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

157

60 ரூபாய் ஊதியம் தரப்பட்டது. இப்போது காவலர்களுடைய சம்பளம் குறைந்தபட்சம் 150 ரூபாயாக ஆக்கப்பட்டுவிட்ட காரணத்தினால் பயிற்சிக் காலத்தில் அவர்களுக்குத் தரப்படுகிற ஊதியம் 146 ரூபாயாக ஆக்கப்பட்டிருக்கிறது.

காவல் படை சேம நல நிதி என்பது ஈட்டுத் தொகையாக அரசு சார்பில் வழங்கப்பட்டதை மாற்றி 1971-ல் சேம நல நிதிக்கு அரசின் சார்பில் 1 இலட்ச ரூபாயும் 1972-ம் ஆண்டு 11/2 இலட்ச ரூபாயும் வழங்கப்பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்வேன். இதனால் 1967-ம் ஆண்டு இந்த சேம நல நிதியின் சார்பாக நிதியுதவி பெற்ற மாணவர்களுடைய எண்ணிக்கை 182 ஆக இருந்ததற்கு மாறாக 1972-ல் 512 ஆக உயர்ந்திருக்கிறது என்பதையும் நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள முடியும்.

காவலர்களுக்கும், படைகலன் தாங்கிய காவலர்களுக்கும் (எஸ்.ஏ.பி.) இடையே இருந்த ஈட்டு விடுப்பு ஊதியத்திலிருந்த மாறுபாடுகள் களையப்பட்டு விட்டன. இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் (D.I.G. services and Co-ordination) டி.ஐ.ஜி பணிகள் என்ற பதவி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குற்றங்கள், குற்றவாளிகள் பற்றிய விவரங்கள், இவைகளை இயந்திரங்களின் மூலம், கம்ப்யூட்டர் மூலம் கணக்கு எடுக்கும் முறை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் பரிந்துரை அடிப்படையில், இதன் மூலம் பழைய குற்றவாளிகள் கைரேகை, அங்க அடையாளங்கள், குற்ற விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பிரிதோர் குற்றம் நடக்கிற நேரத்தில் பழைய விவரங்களையெல்லாம் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இந்த இயந்திரம் பெரிதும் பயன்படுகிறது. இதன்படி 1963 முதல் 1973ஆம் ஆண்டுவரை நடைபெற்றுள்ள 5 இலட்சம் குற்றங்களையும், 3 இலட்சம் குற்றவாளிகள் பற்றிய விவரங்களையும் 73 ஜூலைக்குள் கணக்கீடு செய்து வைக்கப்படும். இந்தியாவிலேயே தமிழ்நாடு காவல் துறையில்தான் இந்த முறையை முதன் முதலாக மேற்கொண்டிருக்கிறோம் என்பதைப் பெருமையோடு நான் சொல்லிக்கொள்ள முடியும். இந்தப் பரிந்துரைகளும், இதன் தொடர்பான ஏனைய பரிந்துரைகளும் நிறைவேற்றப்பட ஒரு