158
காவல்துறை பற்றி
கோடியே அறுபத்தெட்டு இலட்சம் ரூபாய் செலவாகிறது. மேலும் இப்போது அமல் நடத்தப்படுகிற 27 பரிந்துரைகளுக்கான விவரங்களை நான் சொல்லியாக வேண்டும்.
அவர்கள் தாலாட்டுப் பாட்டுப் பாடியதற்காக இவைகளை நான் விவரமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர், முதல் நிலை, இரண்டாம் நிலை, ஆகியோருக்குப் பயிற்சி காலத்தை மாற்றி புதிய திட்டப்படி பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. காவல் துறையினரில் 80 சதவீதம் பேருக்கு வீட்டு வசதி அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தஞ்சை, கோவை காவல் மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. காவல் வட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டு வருகின்றன. புலனாய்வு, நீதிமன்றப் பணி, ரோந்து வருதல் போன்ற முக்கியப் பணிகளுக்கு முதல் நிலைக் காவலர்கள் என்ற (First Grade Constables) புதிய பதவி ஏற்படுத்தப்பட்டுள்ளதில் 3 ஆயிரம் பேர் முதல் நிலைக் காவலர்களாகப் பயன் பெற்றுள்ளனர்.
3
ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் கண்ட்ரோல் ரூம் ஏற்படுத்துவதற்கான முயற்சி, ஒவ்வொரு மாவட்டத்திலும் கைவிரல் ரேகைப் பிரிவு, நிழல் படப் பிரிவு ஏற்படுத்துதல், காவல் வானொலிப் பிரிவில் உள்ள அதிகப்படியான பணியாளர்களை நியமித்தல் கணக்கீடு நிலையத்தில் அதிகப்படியான பணியாளர்களை நியமித்தல், சம்பளப் பட்டியல் தயாரிக்க பிராட்மா (Bradma) முறையை கொண்டு வருதல், வாகன வண்டிகளை ஏழாண்டுகளில் அதிகரித்தல், காவல் நிலையங்களை மாவட்டத் தலைமை நகரங்களோடும் மாநிலத் தலைமையிடத்தோடும் இணைப்பதற்கு ரேடியோ சாதனங்கள் டெலிபிரிண்டர்கள், உருவ நிழல் ஊடனுப்பி ஆகியவைகளை அமைத்தல் - இவையும் இவைபோன்ற மொத்தம் 27 பரிந்துரைகளும் நிறைவேற்ற 3 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது
அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ள 122 பரிந்துரைகளை அமல் நடத்தினால் தொடராச் செலவு 6 கோடியே 10 இலட்சமும், ஆண்டுதோறும் ஆகிற செலவு 2 கோடியே 81 இலட்சமும் அதிகமாகும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்வேன்.