பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

159

1967-ல் 34,964 காவல்துறை ஆட்படையின் எண்ணிக்கையாக இருந்தது. 1972-73ல் 43,364 ஆக அது உயர்ந்துள்ளது. இன்னும் ஐந்தாண்டுகளில் இந்த விகிதாசாரத்தில் அது 46,000 ஆக அதிகரிக்கக் கூடும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்வேன்.

குற்றப் புலனாய்வுகளைக் கவனிக்க சப்-இன்ஸ்பெக்டர் களுக்கும் இன்ஸ்பெக்டர்களுக்கும் இடையே துணை இன்ஸ்பெக்டர் (டெபுடி இன்ஸ்பெக்டர்) என்ற புதிய பதவியும் விரைவில் ஏற்படுத்தப்பட இருக்கிறது என்பதையும் நான்

தெரிவித்துக்கொள்வேன்.

இன்று காலையில் பேசிய உறுப்பினர்களில் சிலர் இவர்களுக்கு சைக்கிள், மோட்டார் சைக்கிள்கள் இவை எல்லாம் வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்திப் பேசினார்கள். 1970-ல் சட்டப் பேரவையிலே கிராமப்புறக் காவல் நிலையங்களுக்குப் படிப்படியாக மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படும் என்று நான் அறிவித்ததற்கு ஏற்ப 1971-ல் 100 மோட்டார் சைக்கிள்களும், 1972-73-ல் 43 மோட்டார் சைக்கிள்களும், 1973-74-ல் 100 மோட்டார் சைக்கிள்களும் வழங்கப்படும் என்ற நிலைமையும் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்வேன். 143 மோட்டார் சைக்கிள்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டாகிவிட்டன.

அதே போல் கிராமப்புறக் காவல் நிலையங்களுக்கு சைக்கிள்கள் வாங்கக் கடன் தொகை -உதவித் தொகை (Loan- cum-subsidy scheme) என்ற அடிப்படையில் 5,000 சைக்கிள்கள் வாங்க அனுமதிக்கப்பட்டு இதுவரை 2,390 சைக்கிள்கள் வாங்கிக் காவலர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்வேன்.

மாநிலத்திலுள்ள 251 காவல் வட்டங்களில் 200 வட்டங்களுக்கு வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, 1970-ல் 88 வாகனங்கள் இருந்தன. 1971-ல் 44 வாகனங்களும், 1972-ல் 68 வாகனங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

மாநிலத்திலுள்ள 820 காவல் நிலையங்களில் இதுவரை 450 காவல் நிலையங்களுக்குத் தொலைபேசி வசதி செய்து தரப் பட்டிருக்கிறது. 1972-73-ல் 166 காவல் நிலையங்களுக்குத்