பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

161

பதக்கம் இருபத்து மூன்றும், வழங்கப்பட்டிருக்கின்றன. 1972-ல் வீரச் செயலுக்கான பதக்கம் மூன்றும் தலைசிறந்த பணிக்கான பதக்கம் இருபத்திரண்டும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் பதக்கம் அளிக்கும் விழா சென்னையிலேயே தொடர்ந்து நடைபெறுவது என்று இல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்தினுடைய தலைநகரிலும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது என்பதையும் மாண்புமிகு உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

இங்கு அவர்களுடைய கட்டாய விடுப்பு ஊதியம் அதிகப் படுத்தப்பட வேண்டுமென்று சிலர் பேசினார்கள். ஏற்கெனவே காவல் துறையினருக்கும் தலைமைக் காவலருக்கும் வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுப்பு அளிக்க வேண்டுமென்றும், ஆனால் அந்த நாளில் ஏதோ பொதுப்பணியின் காரணமாக அவசரத் தேவையின் காரணமாக அவர்கள் அந்த விடுப்பினை எடுத்துக்கொள்ள முடியாமல் - அவர்களுக்கு விடுப்பு வழங்கப்படாமல் - பணியாற்ற அழைக்கப்படுவார்களானால், அந்த ஒரு நாளைக்கு அவர்களுக்கு ஒரு ரூபாய் ஊதியம் தரப்பட்டது. இப்போது அந்த ஊதியம் இரண்டு ரூபாயாக உயர்த்தப்பட்டு இரண்டு நாட்களுக்குமுன் அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வேன். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு ஆகும் அதிகச் செலவு சுமார் ரூ. 21/2 இலட்சமாகும். இதனால் ஏறத்தாழ 10,000 காவலர்கள் பயனடைவார்கள் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்

பணி புரிகிற நேரத்தில் நண்பர் வகாப் அவர்கள் காலையிலே பேசும்போது எடுத்துக் காட்டியதுபோல், பல காவலர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அங்கஹீனர் களாக ஆகிறார்கள், உயிரிழப்புக்கு ஆளாகிறார்கள். அப்படிப்பட்ட வர்களுடைய குடும்பங்களை நிர்க்கதியாக விட்டுவிடாமல் அந்தக் காவலர்களுடைய குடும்பங்களை ஓரளவுக்கு மனிதாபிமான உணர்ச்சியோடு நோக்குகின்ற பொறுப்பினையும் இந்த அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது.

உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் 1969-ம் ஆண்டு சனவரி 21-ம் நாள் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பரமத்தி