பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

I

163

ஒரு சோகச் சம்பவம் : 26-1-1970 அன்று குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொண்ட ஹவில்தார், சங்கரபாண்டியன் கொஞ்சதூரம் நடந்து சென்றபோது நெஞ்சுவலி ஏற்பட்டது ஆனாலும் கடமையிலிருந்து தவறக் கூடாது என்பதற்காக அவருடைய நெஞ்சுவலியைத் தாங்கிக்கொண்டு அணிவகுப்பு முழுவதையும் முடித்துக்கொண்டுதான் நோயைப்பற்றிச் சொல்ல வேண்டும் என்று மிகுந்த சிரமத்திற்கிடையே நடந்து சென்று அணி வகுப்பு முடிந்த இடத்திலேயே சுருண்டு வீழ்ந்து மாரடைப்பால் இறந்து போனார். அவருடைய குடும்பத்திற்கு சேம நல நிதியிலிருந்து 1,500 ரூபாயும், முதலமைச்சர் நிதியிலிருந்து 3,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

நான் இவற்றை எல்லாம் சொல்லக் காரணம் காவலர்களும், காவல் துறை அதிகாரிகளும் நம்மவர்கள்தான். வேறு ஒரு மாற்று உடையை, காக்கி உடையை, நம்மிலே இருந்து வேறுபட்ட உடையை அணிந்து கொண்டிருக்கும் காரணத்தாலேயே நம்முடைய வெறுப்புக்கு ஆளாகின்ற சில உருவங்கள் என்ற அளவில் அவர்களை எண்ணிடக் கூடாது; அவர்களும் இந்தச் சமுதாயத்தில் ஓர் அங்கம். இந்தச் சமுதாயம் வளர, இந்தச் சமுதாயம் நல்ல ஒளி பெற, இந்தச் சமுதாயத்தில் குற்றங்கள் குறைந்து நல்ல தூய்மை ஏற்பட அனைவரும் சேர்ந்து ஆற்றுகின்ற பணியில் காவலர்களுடைய பணியும் இணைந்திருக்கிறது என்ற காரணத்தால்தான் மனிதாபிமான உணர்ச்சியோடு இந்த அரசு அவர்களுடைய நல்வாழ்வில் நிறைந்த அக்கறை காட்டி வருகிறது என்பதற்கு இவைகளையெல்லாம் நான் எடுத்துச் சொன்னேன்.

ஆராரோ பாடியதோடு நிற்கவில்லை; யார் யாரோ செய்யாததை எல்லாம் இன்றைக்கு நாங்கள் செய்துகாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் இந்தக் குறிப்புகளை எல்லாம் நான் தந்தேன்.

அவர்கள் எவ்வளவு அளப்பரிய பணிகளை எல்லாம், தீரச் செயல்களை எல்லாம் ஆற்றி வருகிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர்களேகூட உறுப்பினர்களேகூடச் சொன்னார்கள். எந்த எதிர்க்கட்சியின் தலைவராவது இந்தத் துறை அல்லது இந்தத்