164
காவல்துறை பற்றி
துறையினுடைய நிர்வாகம் மோசமாக இருக்கிறது என்று சொல்லுகிறார்களா என்று உற்றுக் கவனித்தேன். யாரும் சொல்லவில்லை. டாக்டர் ஹாண்டே பேசினாலும் சரி, அம்மையார் அனந்தநாயகி பேசினாலும் சரி, நண்பர் மதி பேசினாலும் சரி, திரு. பொன்னப்ப நாடார் பேசினாலும் சரி, திரு. கே.டி.கே. தங்கமணி பேசினாலும் சரி, கட்சியில் உள்ளவர்கள் யார்?
ஒரு சோகச் சம்பவம் : 26-1-1970 அன்று குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொண்ட ஹவில்தார், சங்கரபாண்டியன் கொஞ்சதூரம் நடந்து சென்றபோது நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆனாலும் கடமையிலிருந்து தவறக் கூடாது என்பதற்காக அவருடைய நெஞ்சுவலியைத் தாங்கிக்கொண்டு அணிவகுப்பு பேசினாலும் சரி, இந்தத் துறையைச் சிலாகித்தே பேசினார்கள். காரணம் அவரவர்களுக்குள்ள ஆசை.
நாம் விரைவிலே ஆட்சிப்பீடத்திற்கு வந்துவிடக் கூடும், ஆகவே இப்போதே அவர்களைப் பாராட்டி வைத்துக் கொள்ளவேண்டுமென்று அந்த ஆசை அவர்கள் உள்ளத்தில் இழையோடுவதை அது காட்டியது. இதையெல்லாம் நீங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். (ஆரவாரம்). சீரியஸாக என்றால் ஆட்சிக்கு வந்துவிடுவோமோ என்று சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதற்காகச் சொன்னேன்.
நான் இந்த ஆய்வுரையில் சிலவற்றைக் குறிப்பிட்டிருக் கிறேன். தர்மபுரி மாவட்டத்தில் ஒருவர் அரசாங்க அதிகாரிபோல் நடித்துப் பயங்கரமான மோசடியில் ஈடுபட்டதைக் காவல் துறையினர் கண்டுபிடித்து இருப்பது சாதாரண விவகாரம் அல்ல.
அதைப்போல மைசூர் மாநிலத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் இரவு நேரங்களில் சென்னை நகரத்தில் ஜன்னல் வழியாக கைகளை நுழைத்தும், யாருமில்லாத நேரங்களில் உள்ளே நுழைந்தும் அவர் கிட்டத்தட்ட 203 குற்றங்களில் ஈடுபட்டவர், அவர் பிடிபட்டார். அவரிடமிருந்து ரூ. 85,000 மதிப்புமிக்க விலை உயர்ந்த தங்க நகைகள், வைர நகைகள், கடிகாரங்கள், டிரான்ஸிஸ்டர்ஸ், சைச்கிள்கள் முதலியன கைப்பற்றப்பட்டு அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப் பட்டிருக்கிறது.