பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

165

ராகவேந்திர ராவ் என்பவர் திருமணக் கூட்டத்தில் தானும் ஒருவர் போல், ஒரு விருந்தினர்போல் வருவார். இப்போதுகூட நாம் ஒருவருக்கு கல்யாண அழைப்பிதழ் அனுப்பினால் அது அவருக்குப் போய் சேருவதில்லை. வேறு யாரோ வாங்கிக் கொள்கிறார்கள். அப்படி வாங்கிக்கொண்டு அவர் விருந்துக்கு வருவார். நாம் அவருக்கு அழைப்பிதழ் அனுப்பியிருப்போம் என்று எண்ணிக்கொண்டு நாம் அவரை வரவேற்போம். மணமகன் வீட்டில் உள்ளவர்கள் அவர் மணப்பெண் வீட்டைச் சேர்ந்தவர் என்று கருதிக் கொள்வார்கள். மணப்பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள் அவர் மணமகன் வீட்டைச் சேர்ந்தவர் என்று கருதிக்கொண்டு வரவேற்பார்கள். அப்படி விருந்தாளிபோல் இந்த ராகவேந்திர ராவ் திருமண வீடுகளில் விருந்தினர்போல் நுழைந்து நடத்திய திருட்டுகளில் ரூ. 20,000 மதிப்புள்ள நகைகள் அவரிடமிருந்து மீட்கப்பட்டிருக்கின்றன. அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

1971 டிசம்பரில் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் 8 பேர்கள் வில்லிவாக்கத்தில் வந்து தங்கினார்கள். அவர்கள் ஆனந்த ராவ் என்பவர் தலைமையில் புகைவண்டிகளில் கொள்ளை நடத்தினார்கள். வழிப்பறிக் கொள்ளைகள் நடத்தினார்கள். இவர்களும் காவல் துறையினருடைய திறமையினால் பிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

செங்கற்பட்டிலும், சென்னையிலும் கன்னக்களவுகளில் ஈடுபட்ட டெல்லிப் பட்டணத்தைச் சேர்ந்த பவேரியா, ஜான்ஸி ஆ கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதும் ஓர் சாதாரண விவகாரம் அல்ல.

ஆந்திராவைச் சேர்ந்த கள்ள நோட்டு அச்சடிக்கும் கூட்டம் ஒன்று அண்மையில் கண்டிபிடிக்கப்பட்டது. 1970-ம் ஆண்டு நவம்பர் முதல் 1972 நவம்பர் வரையில் -எதிர்க் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினார்களே அந்தப் பயங்கரப் படுகொலைகள், 7 படுகொலைகள், 4 திருட்டுக்கள் நடத்திய எட்டுக் கொடியவர்களை நம் போலீஸ் இலாகா கைது செய்தது பாராட்டுக்குரிய அம்சமாகும். அவர்களை நான் தனிப்பட்ட முறையில் பாராட்டியிருக்கிறேன் என்றாலும் இந்த மாமன்றத்தின்