பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

காவல்துறை பற்றி

கோர்ட்டிலிருந்து அதிகாரப் பூர்வமான நடவடிக்கைக் குறிப்புகள் வந்ததும் வழக்கை இங்கு தொடர்ந்து நடத்துவதற்கு இருக்கிறது என்று டாக்டர் ஹாண்டே அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்வேன்.

கோவை 'பி' ஸீரீஸ் டாலர் வழக்கு. இது கோவை கீழ்க் கோர்ட்டில் விசாரணை முடிந்தபின், செஷன்ஸ் கோர்ட்டுக்கு அனுப்பி இரண்டு வாரங்கள் ஆகின்றன. கோவை 'எல்' ஸீரீஸ் டாலர் வழக்கு கோவை நீதிமன்றத்தின் கீழ்க் கோர்ட்டில் விசாரணையில் இருக்கிறது.

திருவண்ணாமலை

வழக்கு.

இதில் நோட்டு அச்சடித்தவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள், எல்லாம் அங்கிருந்துதான்! மொத்தம் 11 குற்றவாளிகள். இதில் மூன்று பேர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இராயப்பேட்டை வழக்கைப்போலவே இதிலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் வழக்கைத் தமிழ்நாட்டில் நடத்தக்கூடாது என்ற ஸ்டே வாங்கினார்கள். தடையை விலக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.

இவை எல்லாம் கிடப்பில் போட்டு விடப்படவில்லை. அதற்கான முயற்சிகளை எல்லாம் அந்த அந்த நீதிமன்றங்களில் எடுக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றன என்பதை நண்பர் ஹாண்டே அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்வேன்.

அதுமாத்திரமல்ல. இந்த வழக்குகளைப் புலனாய்வு செய்து வழக்குத் தொடர நாம் மிக்க சிரத்தை எடுத்துக்கொண்டு ஒரு டி.எஸ்.பி. தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள், ஆறு சப்-இன்ஸ்பெக்டர்கள், நான்கு தலைமைக்காவலர்கள், ஆறு காவலர்கள் அடங்கிய தனிப் பிரிவு ஒன்றைக் குற்றப் புலனாய்வுத் துறையில் இயங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். அதிலுள்ள பெரிய அதிகாரிகள் எல்லாம் இந்த நோட்டுக்களை எப்படி அச்சடிக்கிறார்கள், எப்படி எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அங்கு நாசிக்குக்கு அனுப்பப் பட்டு அங்குள்ள அரசாங்க நாணய அச்சகத்திற்குச் சென்று இதுபற்றிய நுணுக்கங்களை எல்லாம் தெரிந்து அந்த பயிற்சிகளைப் பெற்று வந்திருக்கிறார்கள்.