பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

181

சன்றிருந்தோம். அன்றையதினம் இங்கே ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலம் "தென்னகம்”, 'முரசொலி' அலுவலகங்களிலே புகுந்து இரண்டு அலுவலகங்களையும் சூறையாடியது. அதற்கு யார் பொறுப்பு? ஊர்வலத்திலே போகிற யாரோ சிலபேர் இப்படிப்பட்ட தவறுகளைச் செய்கிறார்கள். ஆகவே நாம் இப்பொழுது எந்த அளவுக்கு இருக்கவேண்டு மென்று சொல்கிறோமோ, அதே அளவுக்குத் தொண்டர்களைத் தனித்தனியாக நாம் பயிற்றுவிக்க வேண்டிய

பட்டிருக்கிறோம்.

கடமைப்

எல்லாக் கட்சியிலும் சிலர் இருப்பார்கள். தி. மு. கழகத்தில் உள்ள அத்தனை பேருமே அமைதியானவர்கள், யாரிடத்திலும் முரட்டுத்தனம் கிடையாது என்று நான் சொல்ல மாட்டேன். ஆத்திரத்திற்கு சில நேரங்களிலே அவசரமாக ஆட்பட்டு விடுகிறவர்கள் கொஞ்சநஞ்சம் எல்ாக் கட்சியிலும் இருப்பார்கள். பொதுக்கூட்டங்களிலே பேசப்படுகின்ற பேச்சைப் பற்றியெல்லாம் இங்கே சொன்னார்கள். காலையிலே என்னைப் பற்றி அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர் இங்கே என்ன பேசினார்? திருப்பி நான் அந்த வார்த்தையை சொல்லக் கூடாது. இங்கேயே ஒரு சட்டமன்ற உறுப்பினர் இவ்வளவு பேருக்கு நேராக இப்படிப் பேசுகிறார் என்றால் மேடையிலே என்ன பேசுவார்கள்? எந்தெந்த அளவுக்கு அமைச்சர்கள் அல்லது கட்சித் தலைவர்கள் தாக்கப் பட்டாலும் அந்தந்தக் கட்சித் தலைவர்கள் தரம் குறையாத அளவுக்கு மேடை அரசியலை நடத்த நாம் பழகிக் கொண்டால் ஆத்திரம் நிச்சயம் தணியும்.

கறுப்புக்கொடி பற்றிச் சொன்னார்கள். குறிப்பாக, பட்டுக் கோட்டை நிகழ்ச்சி பற்றி சொன்னார்கள். பட்டுக்கோட்டை நிகழ்ச்சிக்காக 2 மணிக்கெல்லாம் ஒரத்தநாடு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, உடனே பட்டுக்கோட்டைக்கு போய்விடலாம் என்று நான் சொன்னேன். மாவட்ட ஆட்சித் தலைவர் என்னிடம் வந்து கறுப்புக்கொடி காட்டுபவர்களைச் சந்தித்துப் பேசினேன்; 3 மணியிலிருந்து 4 மணி வரை அங்கே காத்திருப்போம்; நீங்கள் அந்த இடைநேரத்தில் வரவேண்டும்" என்று சொன்னார்கள். அதற்காகவே நான் ஒரு மணி நேரம் ஒரத்தநாட்டிலே உட்கார்ந்து அவர்களுக்காக நான் நேரம் கொடுத்து 3 மணியிலிருந்து 4

4