கலைஞரின் சட்டமன்ற உரைகள்
189
ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது எந்த அளவு பெருமைப்படக்கூடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது என்று ஆளும்கட்சி உறுப்பினர்கள் எடுத்துச்சொன்னார்கள். தமிழகம் அமைதியாக இருக்கிறது என்று பெரியவர் மணலி அவர்களும் சுட்டிக்காட்டினார்கள். நாம் மற்ற மாநிலங்களில் நடைபெறுகின்ற அமளிகளைப் பற்றியும் தமிழகத்தில் நிலவுகின்ற அமைதியைப் பற்றியும் ஒப்பிட்டுப் பார்க்கின்ற இந்த சூழ்நிலையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பலரும் தமிழ் நாட்டில் அமைதி சூழ்நிலை கெட்டுவிட்டது என்று கூறி இருக்கிற காரணத்தால் மற்ற மாநிலங்களில் நடைபெறுகின்ற குற்றங்கள், அந்தக் குற்றங்களை கண்டுபிடிக்க காவல் துறையினர் எடுத்துள்ள முயற்சிகள் அதில் தண்டிக்கப்படுகின்ற குற்றவாளி களின் எண்ணிக்கையில் விகிதாசாரம் ஆகியவைகளையும் தயவுசெய்து நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
நமக்குக் கிடைத்து இருப்பது கிரைம் இன் இண்டியா 1970. கிரைம் இன் இண்டியா 1970 என்ற இந்தப் புத்தகம் மத்திய சர்க்காருடைய உள்துறை இலாகாவால் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகம்.
அந்த புத்தகத்தினுடைய குறிப்புகள், புள்ளிவிவரங்கள் கூறுவதை எடுத்துவைத்துப் பார்ப்போமானால்
—
1970-ல் உத்திரப்பிரதேசத்தில் பதிவான கொலைக் குற்றங்கள் 3,502, விசாரணைக்குப் பின் உண்மை என்று தெரிந்து கொள்ளப்பட்டவை 2,824, உண்மை என்று தெரிந்த பிறகு கண்டு பிடிக்கப்பட்ட குற்றங்கள் 1,927, விசாரணைக்குப் பிறகு தண்டிக்கப்பட்டவர்களின் சதவீதம் 41.69.
மத்திய பிரதேசத்தில் 1970-ல் பதிவான கொலைக் குற்றங்கள் 1,725, விசாரணைக்குப் பின் உண்மை என்று தெரிந்தவை 1,201, அவைகளில் கண்டுபிடிக்கப்பட்டவை 926, விசாரணைக்குப் பிறகு தண்டிக்கப்பட்டவர்களின் சதவீதம் 47.17.
மகராஷ்டிரத்தில் பதிவான கொலை குற்றங்கள் 1,356. அதில் உண்மை எனத் தெரிந்தவை 1,201. கண்டுபிடிக்கப்பட்டவை 926. விசாரணைக்குப் பிறகு தண்டிக்கப்பட்டவர்களின் சதவீதம் 53.
இந்தக் கொலைக் குற்றங்களை இந்த மாநிலங்களோடு நம் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 1970-ல் பதிவான