கலைஞரின் சட்டமன்ற உரைகள்
195
தொலைபேசி வசதி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உவரி, திசையன்விளை ஆகிய இடங்களிலே ஏற்பட்ட தகராறுகள் பற்றி திரு. பொன்னப்ப நாடார் அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தார்கள். அதைப்பற்றி பலபேர்கள் இங்கே சுட்டிக் காட்டிப் பேசினார்கள், திரு. கே. டி. கே. தங்கமணி அவர்களுடைய தொடக்க உரையில் இதைப்பற்றி எடுத்துச்சொன்னார்கள், ஆனாலும் அவர்கள் அதை விரிவாகப் பேச விரும்பாமல் ஓரளவுக்கு சமரஸ ஏற்பாடுகள் அங்கே நடைபெறவேண்டுமென்ற நல்ல நோக்கத்தோடு அரசு தக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்று கேட்டு நிறுத்திக்கொண்டார்கள்.
திரு. பொன்னப்ப நாடார் அவர்கள் விரிவாக அதைப் பற்றிச் சொல்லி அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளைப்பற்றிச் சொன்னார்கள். உவரி பகுதியிலே நாடார் உவரி என்றும் மீனவர் உவரி என்றும் இருக்கின்றன, அந்தப் பகுதியிலே அடிக்கடி சச்சரவுகள் ஏற்பட்டு வருகின்றன. அந்தச் சச்சரவுகளைப்பற்றி இங்கே ஒத்திவைப்புத் தீர்மானங்கள் வந்த நேரத்திலே நான் எடுத்துச்சொன்னது அதைப்பற்றி இங்கே விவாதிப்பதன் மூலமாக மேலும் அது பெருகுவதற்கு இடம் ஏற்பட்டுவிடக்கூடும், யோசித்துச் செய்ய வேண்டும் என்பதாகும்.
அது வகுப்புக் கலவரமாக மூண்டுவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது நம் அனைவருடைய கடமை. நம்முடைய அதிகாரிகள் தலையிட்டு உவரி திசையன்விளை பகுதிகளிலே சமரஸத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
தற்சமயம் உவரி கிராமம், திசையன்விளை காவல் நிலையத்தின் எல்லைக்குள் உள்ளது. அங்கே காவல் நிலையம் இல்லாத காரணத்தாலே வகுப்புக் கலவரங்களைத் தடுக்கமுடிய வில்லை. ஆகவே அரசு உவரி கிராமத்தில் ஒரு காவல் நிலையம் உடனடியாக அமைக்க முடிவு செய்து ஆணையிட்டிருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆ
திசையன்விளை காவல் நிலையத்தை விரிவுபடுத்தி ஒரு போலீஸ் சர்க்கிளாக அதை ஆக்குவதற்கும் முடிவு செய்யப் பட்டிருக்கிறது.