196
காவல்துறை பற்றி
உவரி கிராமத்தில் ஏற்படுத்த இருக்கும் காவல் நிலையத்திற்காக ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு தலைமைக் காவலர், ஒரு முதல்தர காவலர், இரண்டாம்தர காவலர்கள் 16 ஆகியவர்களையும் திசையன்விளையில் ஏற்படுத்த இருக்கும் போலீஸ் சர்க்கிளுக்காக ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு முதல்தர காவலரும், ஒரு இரண்டாம்தர காவலரும் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது, நம்முடைய அரசு பட்டியிலிலிருந்து இல்லாமல் இந்த ஏற்பாட்டை இருக்கின்ற சூழ்நிலைகளுக்கேற்ப உடனடியாக ஏற்பாடுகள் செய்வதற்காக சிறப்பு கட்டளையாக அரசு ஏற்பாடு செய்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவிலேயே போலீஸார் ஊதியங்களைத் திருத்தி யமைப்பதற்காக கமிஷன் போடப்பட்டிருக்கலாம், ஆனால் காவல் துறையைச் சீரமைக்கவும், காவல்துறை பணிகளை ஒழுங்குபடுத்தவும், காவல் துறையினரின் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்கப்படவும், சலுகைகள் அளிக்கப்படவும் அவர்களை ஊக்கப்படுத்துகின்ற முயற்சிகள் இவைகளுக்காகவும் இந்தியாவிலேயே ஒரு போலீஸ் கமிஷன் போட்டது தமிழ்நாட்டிலே திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
போலீஸ் கமிஷனுடைய மொத்தப் பரிந்துரைகள் 133, அவற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை 116, ஒதுக்கி வைக்கப்பட்டவை 13, தள்ளிப்போடப்பட்டவை 4, முழுவதுமாகச் செயல்படுத்தப்பட்ட பரிந்துரைகள் 32 செயல்படுத்தப்பட்டுவரும் பரிந்துரைகள் 38. நாம் ஒத்துக்கொண்ட 116 பரிந்துரைகளில் செய்தித் தொடர்பு துறை சம்பந்தமான பரிந்துரைகளை 3 ஆண்டுகளிலும் ஆட்படைத் திறன்பற்றிய பரிந்துரைகளை 5 ஆண்டுகளிலும், போக்குவரத்து பற்றிய பரிந்துரைகளை 7 ஆண்டுகளிலும் செயல்படுத்தத் திட்டமிட்டுவருகிறோம்.
இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டவைகளுக்கான தொடர் செலவு 3 கோடியே 38 இலட்சமும் தொடராச் செலவு 3 கோடி ரூபாயும் ஆகிறது என்பதை எண்ணிப்பார்த்தால் 116 பரிந்துரைகளையும் ஒரேயடியாக நாம் செயல்படுத்த முடியாது என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள். போலீஸ் கமிஷன் பரிந்துரைகளுக்கு ஏற்பவும், அது நம்முடைய