பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

197

உள்ளத்திலே ஏற்படுத்தியிருக்கும் அடிப்படையான உணர்வும் அவர்களின் சிபாரிசு என்று மட்டும் சொல்லிவிட முடியாது அதன் மூலமாக அது அடிப்படை அமைத்துக்கொடுத்திருக்கிற உணர்வுபூர்வமாகவும் வேறு சில சலுகைகளை நம் காவல் துறையினருக்கு வழங்க இருக்கிறோம். இப்பொழுது இந்த மானியத்தின் தொடர்பாக வேறு சில சலுகைகளையும் நாம் இங்கே மகிழ்ச்சியோடு அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.

காவலர்கள் தங்கள் கடமையை ஆற்றும் நேரத்தில், சமூக விரோதச் சக்திகளுடன் ஏற்படக்கூடிய கைகலப்பினாலோ, அல்லது மற்றக் காரணங்களாலோ வீர மரணம் அடைந்தால், அவ்வாறு வீர மரணம் அடைந்த காவலரின் குடும்பத்திற்கு. எவ்வித நிபந்தனையுமின்றி காவலர் தம் “அதிக அளவு காலச்” சம்பளத்தில் சரிபாதிக்குச் சமமான தொகையை ஓய்வூதியமாக அளிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏற்கெனவே எப்படி பென்ஷன் அளிக்கப்பட்டது என்றால், உதாரணத்திற்கு 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையில் சம்பளம் வாங்குகின்ற ஒரு அதிகாரி இறந்துவிட்டார் என்றால், அவர் 300 ரூபாய் சம்பளம் வாங்கினால் பென்ஷன் விதிமுறைகள், அதற்குட்பட்டபடி பென்ஷன் வழங்கப்பட்டது. ஆனால் இப்பொழுது 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையில் வாங்க வேண்டிய ஒரு அதிகாரி, 300 ரூபாய் வாங்கிக்கொண்டிருக்கும் பொழுது, இப்படிப்பட்ட ஒரு கடமையாற்றுகின்ற நேரத்தில் இறந்துவிட்டால் அவர் வாங்க வேண்டிய 500 ரூபாயைக் கணக்குப் பார்த்து, எந்த விதிமுறைகளையும் வகுக்காமல் சரிபாதிக்குச் சமமான தொகையை ஓய்வூதியமாக அளிக்க விதி செய்திருக்கிறது என்பதை இந்த மாமன்றம் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன்.

செப்டம்பர் 15-ஆம் தேதி, அண்ணா பிறந்த நாளில், இப்படிப்பட்ட வீரச் செயல்கள், அல்லது வீரமரணம் அடைந்தவர் களுக்கு வீரப்பதக்கம், பணமுடிப்பு செப்டம்பர் 15-இல் அளிப்பதை இங்கே உள்ள உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.