பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

199

அவர்களுடைய தேவைகளையும் உணரவேண்டுமென்று இந்தக் குறைபாடுகளைப்பற்றிப் பேசிய பெரும்பாலான உறுப்பினர்கள் தங்களுடைய உள்ளத்திலே அமைத்துக்கொள்ளாமல் பேசியது உண்மையிலேயே வருந்தத்தக்கதாகும்.

ஆனால் நாம் போலீஸ் கமிஷன் அமைத்ததற்குப் பிறகு எந்த அளவிற்கு அவர்களுடைய சம்பளம் அதிகரிக்கப்பட்டிருக் கிறது என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் நன்றாக அறிவார்கள். ஏற்கனவே இருந்த சம்பளத்தோடு அகவிலைப்படியையும் இணைத்து அதனால் பென்ஷன் வாங்குகின்ற நேரத்தில் அதிக லாபம் அடையும் விதத்தில் ஏற்படுத்தியிருக்கிறோம்.

கேரளத்தில் 80 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தோடு டி.ஏ. 125 ரூபாயும் சேர்த்து 205 ரூபாய் கிடைக்கிறது.

கர்நாடகத்தில் 85 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தோடு 125 ரூபாய் டி.ஏ.யும் சேர்ந்து 210 ரூபாய் கிடைக்கிறது. இங்கேதான் ஒரு 5 ரூபாய் அதிகமாகக் கிடைக்கிறது.

ஆந்திரத்தில் 70 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தோடு 120 ரூபாய் அகவிலைப்படியும் சேர்ந்து மொத்தம் 190 ரூபாய் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் அடைப்படைச் சம்பளம் 150 ரூபாயாகி, டி.ஏ. 55 ரூபாயும் சேர்த்து 205 ரூபாய் நாம் அளிக்கிறோம். இதிலே முதல்தர காவலர்களுக்கு 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் என்ற அளவில் மாற்றியமைத்து இருக்கிறோம்.

இன்னும் அவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமென்று திருமதி அனந்தநாயகி அம்மையார் அவர்கள் சொன்னார்கள். தீயணைப்புப் படையினருக்கும் இவர்களுக்கும் இருக்கும் வேறுபாடு அகற்றப்பட வேண்டாமா என்று கேட்டார்கள். அந்தக் கேள்வியை மனிதாபிமானத்தோடு எண்ணிப்பார்த்து நிச்சயமாக, தகுந்த நல்லதொரு முடிவு இந்த அரசு செய்யும் என்பதைத் தெரிவித்துகொள்கிறேன்

தீயணைப்புத் துறையைப்பற்றிப் பேசப்பட்டது. குறிப்பாக குடியாத்தத்தைப்பற்றிப் பலரும் எடுத்துக்கூறினார்கள். நம்முடைய காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. பொன்னப்ப நாடார் அவர்களும் சொன்னார்கள். எனக்குள்ள குறையே, நான் மேலவையிலே ஒரு