பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

201

அடிக்கடி கலந்து பேசி, எல்லா இடங்களிலும் நம் காவல் துறையினர் உஷார்படுத்தப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். அதற்கேற்ப அந்தக் காரியங்கள் நடக்கின்றன.

ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. நம் மாநிலத்திலுள்ள போலீஸ்ஸாரின் எண்ணிக்கை 40,000. ஆனால் நாமோ 41/2 கோடி மக்கள் இருக்கிறோம்.

அந்த விகிதாச்சாரப்படி பார்த்தால் 1,000 பேருக்கு ஒரு காவலர் என்று வருவார். ஆயிரம் பேருக்கு ஒரு காவலர் இருக்கிறார். ஆனால், எத்தனை கிராமங்கள், எத்தனை ஊர்கள், எத்தனை சிற்றூர்கள், எத்தனை நகரங்கள் இருக்கின்றன என்று எண்ணிப் பார்த்தால், உடனடியாக எல்லா இடங்களிலும் தீ விபத்துகள் ஏற்படும்பொழுது அங்கே அதிகாரிகள் அடுத்த கணத்திலேயே இருப்பது என்பது இயலாத காரியம். அனந்தநாயகி அம்மையார் அவர்கள் சொன்னார்கள், தீ விபத்து அதிகாரிகள் எங்கே போனார்கள் என்று கேட்டார்கள். அதிகாரிகளெல்லாம் எங்கெங்கே தீ விபத்து ஏற்படப்போகிறது என்று ஜோசியம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. ஆனால் தீ விபத்து ஏற்படும் நேரத்தில் உடனடியாக அவர்கள் அங்கே செல்லத் தயங்கினார்களா என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அதிலே தவறு ஏற்பட்டால் அவர்களைக் கண்டிக்க, தண்டிக்க, விசாரிக்க, விளக்கம் கேட்க நமக்கு உரிமை உண்டு. நிச்சயமாக அரசு அந்த நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருக்கிறது.

ஆனால் ஒவ்வொரு தீ விபத்து நடைபெறும் இடத்திலும் அதிகாரிகள் முன்கூட்டியே இருப்பது என்பது இயலாத காரியம். எங்கே பரவலாக நடைபெறுகிறது என்ற விவரம் தெரிகிறதோ அங்கெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்கக் காவலர்கள் தயராக இருக்கிறார்கள்.

திருமதி த. ந. அனந்தநாயகி : நான் சொன்னது குடியாத்தம் தீ விபத்தில் ஜோசியம் பார்க்க வேண்டிய அவசியமில்லை - ஆனால் யாரோ ஓரிருவர் லீவில் போகலாம், கம்ப்ளீட்டாக, ஏணிப்படிபோல் இருக்க வேண்டிய அந்த 4, 5 பேர்களும் லீவில் போவது என்றால் எல்லோரும் ஒன்றாக ஜோசியம் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்களா ? திடீரென்று தீ