பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

205

தீயணைப்புத் துறையினருக்கு 15,000 ரூபாய் மானியமாக வழங்க அரசு தீர்மானித்திருக்கிறது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுவாக காவல் துறையைப் பாராட்டிப் பேசினார்கள். என்ன காரணத்தாலோ சென்ற ஆண்டு காவல்துறை ஏற்றுக்கொண்ட கடுமையான கண்டனங்களுக்கு ஆளாகாமல் இந்த ஆண்டு எல்லாக் கட்சிக்காரர்களும் - தோழமைக் கட்சியைச் சொல்லவில்லை. முஸ்லீம் லீக் தலைவர் மொய்தீன் பேசினார் மற்ற எதிர்க் கட்சிக்காரர்களும் அரவணைத்துப் பேசுவது போல் தெரிந்தது. 1976-ஐ எண்ணிக்கொண்டு இன்றைக்கு அரவணைத்துச் செல்ல வேண்டியது முறை என்ற கற்பனையோடு, கனவோடு அரவணைத்துப் பேசினார்கள் என்று எண்ணுகிறேன் பரவாயில்லை. இரண்டாண்டு காலத்திற்குக் காவல்துறை எங்களிடத்தில் நல்ல மிளிர்ச்சியோடு பழகும் என்ற அந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

-

காவல் துறையைப் பாராட்டிவிட்டு அதே நேரத்தில் அவர்கள் ஏன் கெட்டுப்போகிறார்கள் தெரியுமா? ஆளும் கட்சியின் தலையீடு; ஆளும் கட்சி தலையிடுகிற காரணத்தால்தான் காவல் துறை களங்கப்பட்டுவிட்டது என்று பலவகையில் எடுத்துச்சொன்னாலும், எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல முடியாவிட்டாலும், அவற்றைப்பற்றி நிச்சயமாக அறிவேன் என்றாலும்கூட ஒன்றிரண்டு பற்றி விளக்கத் தயாராக இருக்கிறேன்.

-

மணலி அவர்கள் சொன்னார்கள் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுபேர் தலையீடுமே இருக்கிறது என்று சொன்னார்கள். தலையிடுவதற்கும் முறையிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எதிர்க்கட்சிக்காரர்கள் சொல்வது, எதுவாக இருந்தாலும் ஊரில் நாங்கள்தான் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று முறையிடுவோம்; ஆளும் கட்சிக்காரர்கள் முறையிடவே செல்லக்கூடாது என்று சொல்லுகிறார்கள். நான் அதைக் கண்டிப்பாக மறுக்கிறேன்.

முறையிடுகிற உரிமை எதிர்க் கட்சிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறதோ அதைப்போல் ஆளும் கட்சிக்காரர்களுக்கும் இருக்கிறது. வழக்குகள் போட்டால் ஆளும் சட்சிக்காரர்களுக்குச் சார்பாகவே நடைபெறுகிறது என்றெல்லாம் பேசப்படுகிறது.