20
காவல்துறை பற்றி
அதிலும் நீங்கள் இருக்கிற இந்த மன்றத்திற்கு எப்படிக் கொண்டுவர முடியும்? அவரே கூறியிருக்கின்றார்.
LL
“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன் மறப்பர் காவலன் காவா னெனின்"
என்று திருவள்ளுவர் 'காவலன்' என்ற சொல்லால் அரசனைக் குறிப்பிடுகிறார். அரசனைக் குறிப்பிடுகின்ற சொல்லால் போலீசாரை அழைக்கலாமா, அவ்வளவு அகந்தையா இவர்களுக்கு என்று அமைச்சர் அவர்கள் நினைக்கலாம். ஆனால் அமைச்சர் அவர்கள் சென்ற தடவை பேசிய பேச்சில் Friend, philosopher and guide என் போலீசைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆகவே காவலர், காவல் நிலையம் என்று சொல்வதில் தவறு அல்ல. அதே நேரத்தில் இப்போது போலீஸ் ஸ்டேஷன் என்றிருப்பதை மாற்றவேண்டும் என்று நான் கூறவில்லை. இருக்கின்ற அருந்தமிழை அழிக்கின்ற வகையில் ஏன் முயற்சி எடுக்கிறீர்கள்? அவ்விதமான முயற்சியில் தயவு செய்து ஈடுபட வேண்டாம் என்பதை மிகவும் பணிவன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த போலீஸ் துறையில் இருக்கின்றவர்களின் ஊதியத்தைப் பற்றி, அவர்களுடைய வசதிகளைப்பற்றி, அவர்களுடைய வீட்டு வசதியைப்பற்றி குறிப்பிடவிரும்புகிறேன். அவர்களுடைய அடிப்படைச் சம்பளம் 65 ரூபாயில் துவங்கி ஆண்டு ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்வு பெற்று 70 ரூபாய் அளவுக்கு வந்த பின்னால் இரண்டு ரூபாய் அளவுக்கு உயர்வு பெற்று கடைசியில் 90 ரூபாய் வரையிலும் பெறுகிறார்கள். இவ்விதம் 90 ரூபாய் பெறுவதற்கு 15 ஆண்டுகள் வரையில் சேவை செய்தாகவேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். இந்த அடிப்படை சம்பளத்தை உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் அவர்கள் முன்னால் வைக்க விரும்புகிறேன். இதில் சம்பளத்தை உயர்த்தவேண்டும் என்று சொல்லும்போது, ஆண் போலீசுக்கு மட்டுமல்ல, பெண் போலீசுக்கும் சேர்த்துத்தான் – பெண் போலீஸ் படையை நிறுவப் போவதாகவும் செய்தி வந்தது, சில பத்திரிகைகளில். அதைப் பற்றிக் கார்ட்டூன் போடப்பட்டதோடு அந்தச் செய்தி முடிந்து விட்டது. அதைப்பார்த்துதானோ என்னவோ, போலீஸ் வேலை இவ்வளவு கஷ்டமா, என்று எண்ணித்தான் பெண்கள் இதற்கு அதிகமான
அளவில்